உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
தி.ஸ்ரீராம் பாலாஜி, கொழையூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின், ஏதோ ஹிந்து மதத்திற்கு எதிரானவர் போலவும், மற்ற மதங்களை மட்டுமே ஆதரிப்பவர் போலவும், சிலர் புலம்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு, நான் சொல்வதாவது:
ஸ்டாலின் பிறப்பால் ஒரு ஹிந்து. அவரின் கல்விச் சான்று முதல் அனைத்திலும், ஹிந்து என்று தான் இருக்குமே தவிர, வேறு மதத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்காது. ஹிந்து மதத்திற்கு எதிரானவர் என்றால், அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்வதை தடுத்திருக்க மாட்டாரா?

ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் முதல்வர் வாழ்த்து கூறுகிறார்; ஹிந்து பண்டிகைகளுக்கு கூறுவதில்லை என்று குறை கூறுபவர்கள், அவர் திடீரென தீபாவளிக்கு வாழ்த்து கூறினால், ஓட்டுக்காக தன் கொள்கையிலிருந்து மாறி விட்டார்; தடம் புரண்டு விட்டார் என்று மாற்றியும் பேசுவர்.
மொத்தத்தில், ஸ்டாலின் எந்த ஒரு சூழ்நிலையிலும், ஹிந்து மதத்திற்கு எதிராக இருந்ததில்லை. அவரை ஹிந்து மதத்திற்கு எதிரானவர் என்று கூறி, நம்மிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்.
கேவலமான பதிவு. வந்தேறி மதத்தினர் முன் ஹிந்துக்களைஇழிவு படுத்தியவன் .பல கோயில்களை இடித்தவன் ஹிந்துக்களுக்கு நல்லவனா