சிம்கார்டு விற்பனைக்கு
கடலுார்-கடலுார் பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் ஜெயகுமார் ஜெயவேலு வெளியிட்ட செய்திக்குறிப்பு;தமிழ்நாடு பி.எஸ்.என்.எல்., வட்டத்தில் கடலுார் வர்த்தக பகுதிக்குட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திட்டகுடி நகரங்களில் சிம்கார்டுகள், ரீசார்ஜ் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.இது தொடர்பான விபரங்களை www.tamilnadu.bsnl.co.in என்ற முகவரியில் காணலாம். மேலும் விபரங்களுக்கு உதவி பொதுமேலாளர் மொபைல் எண் 9486101314, இளநிலை தொடர்பு அதிகாரி எண் 9486104644 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!