Load Image
Advertisement

அரசு விழாவில் சிறுமியின் பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்

 அரசு விழாவில் சிறுமியின் பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்
ADVERTISEMENT
புதுடில்லி: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் மகளின் பேச்சை கேட்ட பிரதமர் மோடி, உணர்ச்சிவசப்பட்டார்.


குஜராத்தில் பயனாளிகளுக்கு அரசின் நிதியுதவி வழங்கும், மாநில அரசின் திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பரூச் நகரில் விழா நடந்தது. இந்த விழாவில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பயனாளிகளுடன் உரையாடினார்.


அப்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருடன் பேசிய மோடி, 'உங்கள் மகள்களை படிக்க வைக்கிறீர்களா? என்ன படிக்கிறார்கள்? என்று கேட்டார்.


இதற்கு பதிலளித்த அவர், தனது மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவர் ஆக விரும்புகிறார் என பதிலளித்தார்.


இதனையடுத்து அவரது மகளிடம் பேசிய மோடி, மருத்துவ தொழிலை தேர்ந்து எடுத்ததற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த அந்த சிறுமி, எனது தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பை பார்த்து டாக்டராக ஆசைப்பட்டேன் எனக்கூறி கண்ணீர் விட்டார்.

Latest Tamil News
இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பிரதமர் மோடி, சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர், அந்த சிறுமியின் மன உறுதியை பாராட்டிய மோடி இந்த கருத்து தான் உங்களின் வலிமை என்றார். பின்னர், அவரது தந்தையிடம், உங்கள் மகளின் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் அதனை செய்கிறேன் என உறுதியளித்தார்.


வாசகர் கருத்து (5)

  • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

    இது என்ன பிரமாதம்... எங்களின் இந்திய ஊராட்சிமன்ற முதல்வர் அடுத்த கிராமசபை கூட்டத்தில் இதை செய்துகாட்டுவார்.

  • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,அல்பேனியா

    இரண்டு முறை நீட் எழுத சொல்லுவீங்க வேற என்ன பண்ண முடியும் உங்களால்

  • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

    ...

  • ஆரூர் ரங் -

    உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் வாரிசுகள் எல்லாம் டாக்டர் ஆக ஆசைப்பட்டால்? வீடில்லாத வர்கள் வாரிசுகள் என்ஜினீயரிங், பசியுள்ளோர் வாரிசுகள் எல்லோரும் 😛 கேட்டரிங், இப்படியே போனால் நாடு தாங்குமா? ஆசைக்கும் APTITUDE கும் வேறுபாடு தெரியாத தலைமுறை 🙄. மாற்றி யோசியுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்