dinamalar telegram
Advertisement

பட்டினப் பிரவேசம் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

Share
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டினப்பிரவேசம் திருவிழா, ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து ஜபம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடிமரத்திற்கு எழுந்தருளினார். அதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கோயில் கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.

குருபூஜை பெருவிழாவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 20ம் தேதி பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவமும், 21ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளது.

பல்வேறு தமிழ் சைவம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. விழா நிறைவாக 11ம் நாள் திருவிழாவாக 22 ஆம் தேதி ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது.

இன்று ( மே.12 ) காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (111)

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  .....

 • தமிழ்மணி. கோவன்புத்தூர். - ,

  சிவபெருமானின் ருத்ர தாண்டவம் ஆரம்பம் இனிமேல்! திருட்டு திராவிஷங்கள் கதறல் ஆரம்பம்!

 • Nalla - Singapore,சிங்கப்பூர்

  இப்படித்தான் பிரச்னையுடன் (ஓன்று ) உடன் கட்டை ஏறுதல் ஒழிந்தன, (இரண்டு) பால்ய விவாகம் ஒழிந்தன, (மூன்று) விதவை மறுமணம் நடத்தினோம் (நான்கு) கை ரிட்ச்சா ஒழிந்தன (ஐந்து) மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கு எதிர்காலம் ஒழியும் - காத்திருப்போம் - நல்லவன்

  • krishna - chennai,இந்தியா

   Nalla உன் ஈர வெங்காயம் சொரியானை ஏன் பல்லக்கில் வைத்து சொரியாரிஸ்ட் கூட்டம் தூக்கியது..உனக்கு அப்படியே விடியல் அரசின் மூளை.எதை எதோடு ஒப்பிட்டு கருத்து போடுகிறாய்.உன்னை சொல்லி குத்தமில்லை.எல்லாம் முரசொலி மட்டுமே படிப்பதன் விளைவு.கொடுமை.

  • ஆரூர் ரங் - ,

   ஆனா நிதி குடும்பத்துக்கு உ.பி ஸ் பல்லக்கு தூக்கி பரம்பரை நிரந்தரக்😪 கொத்தடிமைகளாக இருப்பது மட்டும் மாறாது.

  • Suri - Chennai,இந்தியா

   இவர்களுக்கு தேவை என்றால் கடல் கடப்பார்கள். அது தீட்டாகாது....அந்த மரபை எல்லாம் இவர்களே உடைப்பார்கள்... ஹி ஹி எச் eh

  • Neutrallite - Singapore,சிங்கப்பூர்

   ? செய்யணும்னு நெனைக்கறதும் அவுங்க சுதந்திரம், வேணாம்னா அதுவும் அவுங்க பாடு...மத்தவங்க தலையிட கூடாதுன்னு உங்க பகுத்தறிவுக்கு தோணலியா? இதாவது மக்கள் செயல் சம்மந்த பட்ட விஷயம்...அரசோ கட்சியோ தனக்கு வேணும்னா எட்டு வழி சாலையை எதுத்து போராட்டம் பண்ணுவோம், இல்லன்னா மீடியாவை சரி கட்டி அமுக்கி வச்சுட்டு சைலண்டா பண்ணுவோம்ன்னு இருக்குதே...இதுக்கு பேரு என்ன ?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அண்ணாமலை ஆணையிடுகிறார்... அப்படியே நடக்கிறது தமிழகத்தில்..... தென்னாடுடைய சிவனே போற்றி...

  • Suri - Chennai,இந்தியா

   கட்சியில் இருக்கிற காயத்ரி ரகுராமமே ஆட்டுக்குட்டி ஆணைய மதிக்கவில்லை... வந்துட்டாரு... சோம்பு தூக்க....

  • sridhar - Chennai,இந்தியா

   திமுகவுக்கு வெற்றிகரமான தோல்வி.

  • Neutrallite - Singapore,சிங்கப்பூர்

   ...உங்க ஆளுங்க தலைமையை மீறி தேர்தலியே கூட்டணி கட்சிக்கு எதிரா நின்னவங்க...கண்ணாடி வீட்ல இருந்துகிட்டு கல்ல எரியுறீங்க..

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  சிக்ஸர் அடிக்க முயன்ற விடியல் ஹிட் விக்கெட்டு ஆகி விட்டது.... திராவிட மாயை இனி நீங்கும்....

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்