Load Image
Advertisement

லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்

புது டில்லி: சர்ச்சைக்குரிய தேச துரோக சட்டத்தை மத்திய அரசு பரிசீலனை செய்வதாக தெரிவித்த போதும், உச்சநீதிமன்றம் அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக இன்று அறிவித்தது. இவ்வுத்தரவுக்கு ”லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்” என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
Latest Tamil News

பிரிட்டிஷ் கால சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம். இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.
Latest Tamil News
உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது: நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை என ஒன்று உள்ளது. அதனை அரசின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும். நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும். எங்களிடம் தெளிவான எல்லை நிர்ணயம் உள்ளது. அந்த லட்சுமண ரேகயை யாரும் கடக்கக்கூடாது. இவ்வாறு கூறினார்.


வாசகர் கருத்து (6)

 • Chandramohan M - Ootacamund,இந்தியா

  Yes what the central minister says is right. When it hurts you, you are reacting. As, a matter of fact everyone of the pillars of democracy - parliament, judiciary etc - should adhere to the policy of 'not crossing the lakshman rekha of theirs'. Do the central government is not crossing while appointment of governors or governors are not crossing their limits.

 • jayvee - chennai,இந்தியா

  பல நாடுகளில் ராணுவ அத்துமீறலாலோ அல்லது மக்கள் புரட்சி (அதாவது சீன அல்லது ரஷ்யா ஆதரவுடன்) என்ற சிவில் வார்களினாலோ நாட்டில் குழப்ப நிலை ஏற்படும்.. .

 • sethusubramaniam - chennai,இந்தியா

  நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவும், மேலும் வழக்குகள் போடாமலிருக்கவும் சொன்னது சரி. தேச விரோத வழக்கிலே ஜெயிலில் இருக்கறவங்க ஜாமீன் மனு குடுக்கலாம்கறது கொஞ்சம் அதிகபட்சமான தெரியுது. தேச துரோகிகள் நீதிமன்றத்தையோ , நீதிபதிகளையோ தாக்கியினால்தான் இவங்க அதை சீரியஸா எடுத்துக்குங்க போலெ இருக்கு.

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  Is it a warning to SC? Whether the Minister wants SC to fall in line of thinking of the Govt?

 • s t rajan - chennai,இந்தியா

  தலைமை நீதிபதி பல சர்ச்சைகளுக்கு இடமாகும் வகையில் பணியாற்றுவது தர்ம சங்கடமானது. நாட்டின் நலன் கருதி நீதி மன்றங்கள் நடுநிலையோடு இயங்க வேண்டும். இல்லாவிட்டால் தேச எதிர்ப்பு சக்திகள் துள்ள ஆரம்பித்துவிடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement