சென்னை: திமுக எம்.பி., திருச்சி சிவாவின் மகன் பா.ஜ.,வில் இணைந்தது குறித்த கேள்விக்கு திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்கையில், ‛எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு போனபோதே கவலைப்படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம்' எனப் பேசியுள்ளார்.
திமுக.,வின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் உள்ள திருச்சி சிவா, அக்கட்சியில் முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுபவர். இந்த நிலையில் அவரது மகன் சூர்யா, திடீரென திமுக.,வில் இருந்து விலகி கடந்த 8ம் தேதி பா.ஜ.,வில் இணைந்தார். இதனால் திமுக.,வில் சலசலப்பு ஏற்பட்டது. தனக்கு திமுக.,வில் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில்: எம்.ஜி.ஆர் திமுக கட்சியை விட்டு போனபோதே கவலைப்படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம். திமுக தேம்ஸ் நதி மாதிரி, யார் வந்தாலும் யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை. தேம்ஸ் நதி போன்று 70 வருடம் திமுக போய் கொண்டிருக்கிறது இன்னும் 100 ஆண்டுகள் போகும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பதிலளித்தார்.
எம்ஜிஆர் எங்கே போனார். எம்ஜிஆரை தூக்கி எறிஞ்சிட்டு வண்டு . துளைத்த மாங்கனியை தூக்கி எறிந்தேன் என்று தலைவர் திமிராக சொன்னார். இவருக்கு எம்ஜிஆரை தூக்கி எறிஞ்சோம்னு சொல்ல இப்போ தைரியம் இல்லை. சொல்லிட்டா வெளியே தலை காட்ட முடியாதுன்னு பயப்பிடுறார். வைகோ தான் பிரிந்து போன மாதிரி தெரிகிறது.