தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அதன் மீது பற்றும், பாசமும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழுக்காகவே தங்களை அர்ப்பணித்தது போல பேசும் சிலர் வெளியில் தமிழ்…தமிழ்…எனப் பேசிவிட்டு, திரை மறைவில் ஹிந்திக்கு வலை வீசுவதையும் பார்க்க முடிகிறது.
தமிழ் சினிமாவில் இன்றல்ல கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி சினிமா நட்சத்திரங்கள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். இங்குள்ள தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் நடிகைகளுக்கு பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாய்ப்பளிப்பதே இல்லை. தமிழ் நடிகைகளுக்கு சில பல லட்சங்கள் சம்பளம் தந்தாலே போதும். ஆனால், பாலிவுட்டிலிருந்து வரும் நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம், அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கு சம்பளம் என எத்தனை கோடி செலவானாலும் தரத் தயாராக இருக்கிறார்கள்.

இங்கு வெற்றி பெற்று ஓரளவு பேரும், புகழும் அடைந்த சிலருக்கு உடனே ஹிந்திக்குப் போக வேண்டும் என்று ஆசை. இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலருக்கும் அந்த உண்டு. இங்கிருந்து அங்கு போக வேண்டும் என்ற ஆசையில் சிலர் இருக்க, இங்கு தங்களை நிலை நிறுத்திக் கொள்ள அங்கிருந்து இங்கு ஆட்களை அழைத்து வருபவர்களும் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். அது நடிகை, நடிகர்களுடன் நின்று விடாமல் தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் வரை கூடிக் கொண்டே போகிறது.
ஹிந்தியை தீவிரமாக எதிர்க்கும் திமுக.,வின் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. அந்த படம் ஹிந்தி படமான ‛ஆர்டிக்கிள் 15' படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹிந்தித் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை, வலிமை” படங்களைத் தொடர்ந்து தன் 61வது படத்தையும் அவர் தயாரிப்பில்தான் நடிக்கிறார் அஜித்.

தமிழில் தொடர்ந்து தன்னை ஒரு தனித்துவமான இயக்குனர் எனக் காட்டிக் கொள்ளும் பா.ரஞ்சித் கடைசியாகத் தயாரித்த 'ரைட்டர்' படத்திற்கு பாலிவுட் தயாரிப்பாளர்களுடன்தான் கூட்டு சேர்ந்துள்ளார். 'பிர்சா முண்டா' வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஹிந்தியில் இயக்குவதாக அறிவித்தார்.

தங்கள் குடும்பத்தையே தமிழ் ஆதரவாளர் குடும்பமாகக் காட்டிக் கொள்ளும் சூர்யா, அடுத்து ஹிந்திக்குச் சென்றுள்ளார். அங்கு அக்ஷய்குமார் நடிக்கும் 'சூரரைப் போற்று' படத்தை அவர் தயாரிக்கிறார். அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்களை ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை.

சர்ச்சைகள் வரும் போதெல்லாம் தன்னை தமிழுக்கு ஆதரவாகக் காட்டிக் கொள்ளும் ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தியில் இசையமைத்த படங்கள் தான் அதிக வெற்றியை ஈட்டியுள்ளன. அவரை உலக அளவிற்கும் கொண்டு சென்றுள்ளன. இப்போதும் ஹிந்தி சினிமாவை விட்டு அவர் விலகவில்லை.
'ஹிந்தி தெரியாது போடா' என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமயத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ‛ஐயம் தமிழ் பேசும் இந்தியன்' என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். இவரும் ஹிந்தியில் ராஜா நட்வர்லால் என்ற படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். அதேப்போன்று சமீபத்தில் ஹிந்தியில் டாப் டக்கர் என்ற ஆல்பம் வெளியானது. இதில் ராஷ்மிகா உடன் ஆடி, பாடி, நடித்து இசையும் அமைத்திருந்தார் யுவன்.

யுவனை போன்று 'ஹிந்தி தெரியாது போடா' என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், 'டாடி' என்ற ஹிந்திப் படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படி முன் வாசலில் ஹிந்தியை எதிர்த்துப் பேசிவிட்டு, பின் வாசல் வழியாக ஹிந்திக்கு சால்வை அணிவித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தமிழ் ஆர்வலர்கள். பேசுவது ஒன்று, செய்வது மற்றொன்றாக இருக்கிறது இவர்களது செயல்கள்.
வாசகர் கருத்து (51)
அப்படி ப்பார்த்தால், தமிழ் மலையாள படங்கள் அதிகளவில் ஹிந்திக்கு டப் ஆகியும், ரீமேக் ஆகியும் சென்றிருக்கிறது... அதற்காக அவர்கள் 'தமிழை' தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்குகிறார்கள் என்று அர்த்தமா? தொழிலுக்காக இதெல்லாம் எல்லா இடத்திலும் நடப்பதுதான்...இங்கு எவரும் ஹிந்தி எனக்கு வேண்டவே வேண்டாம் ,ஹிந்தி எழுத்தை பார்த்தாலே கண்ணா மூடிக்குவேன், அப்படியெல்லாம் சொல்லவில்லை... எங்கள்மேல் ஹிந்தியை திணிக்காதே...ஹிந்தியை கட்டாயமாக்காதே, ஹிந்தியை எங்கள் அலுவல்மொழியாக்காதே...ஹிந்தி இல்லாவிட்டால் இந்தியாவே இல்லை என்ற மாயையை உருவாக்காதே.....ஹிந்தியை பேசி பேசி, தங்களின் சொந்த மொழியை தொலைத்த எத்தனை மாநிலங்கள் இந்தியாவில் உண்டு தெரியுமா? ? ஹிந்தி திணிப்பை ஆரம்பம் முதலே எதிர்த்து தமிழ்நாடுதான்., தமிழனின் தொலைநோக்கு பார்வை கண்டு, இன்று கர்நாடகாவைபோல பல மாநிலங்கள் வியந்து நிற்கிறது, விழித்துக்கொண்டிருக்கிறது
இதற்க்கு எல்லாம் அந்த ஹிந்தி காரன் தான்.ஹிந்தி எதிர்ப்பாளர்களை ஏன் paali woodil நுழைய விட்டான்
இவர்கள் போலி போராளிகள், இத்தனை ஆண்டுகளாக தமிழை வளர்த்ததும் இல்லை ஒரு மண்ணும் பன்னவிலை ஆனால் இவர்கள்தான் தமிழை காக்கவந்த கடவுள் மாதிரி பேசுவானுங்க தமிழை அழித்துவிட்டு இவர்கள் ஆங்கிலம், உருது, அரபிக் இவற்றை வளர்ப்பதற்க்கே உள்ளடி வேலை செய்கின்றனர் இந்த திருட்டு திராவிட கூட்டம்.........இதை மறைப்பதற்கு ஹிந்தி வேண்டாம் போடா என்பது இவர்களின் தந்திரம்....... இந்த திரைத்துறையில் உள்ள கழிசடைகள் தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து விட்டனர் இப்போது தமிழை ஒழிக்க உள்ளடி வேலை செய்கின்றனர்.....
தாய் தமிழ்மொழி என்றென்றும் வாழும் . தமிழ்நாட்டில் தமிழை காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு அலையும் கூட்டத்தின் பொருளாதர பின்னணியை நன்கு பரிசோதிப்பது நல்லது . உண்மையிலே ஏதாவது ஒரு வேலை செய்து வாழவேண்டிய சூழலில் உள்ள எந்த நபருக்கும் நேரத்தை வீணடிக்க இது போல சந்தர்ப்பங்கள் அமையாது .
பசுத்தோரால் போர்த்யா கழுதைகள்.