Load Image
dinamalar telegram
Advertisement

12 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்த கடல்சார் உயிரின படிமம் ஒப்படைப்பு

பெரம்பலுார் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, பல்வேறு நாடுகளில் கண்டுபிடித்த அரிய வகை கடல் சார் உயிரினங்களின் படிமங்கள் மற்றும் எச்சங்களை சார்ஜா மியூசியம் எஜுகேஷனல் நிறுவன இயக்குனரும் புதைபடிம ஆராய்ச்சியாளருமான நிர்மல்ராஜ், பெரம்பலுார் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வழங்கினார்.

Latest Tamil News

இது குறித்து அவர் கூறியதாவது: பெரம்பலுார் மாவட்டம், சாத்தனுார் பகுதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்தது. அப்போது வாழ்ந்து வந்த கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியன காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின. புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது, படிமங்களின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு தெரியவந்தது. சாத்தனுாரில் கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கோனிபர்ஸ் வகையைச் சார்ந்த பூக்கள் தோன்றாத இந்த அடிமரம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற புவியியலாளர் டாக்டர் கிருஷ்ணன் என்பவரால் 1940ம் ஆண்டு கண்டறியப்பட்டது.
Latest Tamil News
அதுமட்டுமல்லாது, சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன கடல் வாழ் உயிரினமான அம்மோ நைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிமங்கள், பெரம்பலுார் மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கின்றது. கலெக்டரின் முயற்சியால், பெரம்பலுார் தாலுகா அலுவலக வளாகத்தில் அம்மோ நைட்ஸ் படிமங்களுக்கு என்ற பிரத்தியேக அருங்காட்சியகம் அமைப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆழ்கடல் பூச்சி வகை எச்சங்கள்
உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று கடல்சார் உயிரினங்கள் குறித்தும், புதைபடிவங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்யும் பணியில் உள்ள நான், என்னிடம் உள்ள மடகாஸ்கார் நாட்டில் சுமார் 10 முதல் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, கடல் உயிரினங்களின் அம்மோநைட்ஸ் 5 படிமங்கள், பொலிவியா நாட்டில் 40 முதல் 50 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆழ்கடல் பூச்சி வகை எச்சங்கள் ஒரு ட்ரிலோபிட்ஸ் படிமம் மற்றும் பெரம்பலுார் மாவட்டம், காரை பகுதியில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட கடல் சுறாவின் படிமங்கள் போன்றவற்றை பெரம்பலுார் மாவட்டத்தில் புதிதாக உருவாகவுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக கலெக்டரிடம் வழங்கியுள்ளேன்.
இந்தியாவிலேயே அம்மோ நைட்ஸ் எனப்படும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்த கடல்சார் உயிரினத்திற்கு என்று பிரத்தியேக அருங்காட்சியகம் அமைக்க படுவது இதுவே முதன் முறை இவ்வாறு அவர் தெரிவித்தார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (5)

  • ஆரூர் ரங் -

    இன்னும் கொஞ்சம் கீழே போய் தோண்டி திராவிடம் கிடைக்கிறதா ன்னு பாருங்க. 🤫கல் தோன்றும் முன் உருவான 420 தத்துவம் அது

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சிறப்பு...

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    மனித இனமா தோன்றி அட்லீஸ்ட் 1 கோடி ஆண்டுகளாவது மினிமம் இருக்கும் என்று கொள்வோம், பாலைவன மதங்களில் குறிப்பிட்டுள்ள இறுதி தீர்ப்பு அதாவது ஜட்ஜ்மெண்ட் டே என்பது வரும்போது? (அப்படி ஒன்று இருந்தால்) வெறும் 2ஆயிரம் ஆண்டுகளை நிறைவு செய்யாத முதல் மாதமும் ஆயிரத்துஐநூறு ஆண்டுகளை நிறைவு செய்யாத இரண்டாவது மத நூல்களும் இல்லாத சுமார் 99லட்சத்து 998ஆயிரம் ஆண்டுகளாக இந்த மதங்களை மற்றும் புத்தகங்களை பற்றி தெரியாத (ஏன்னென்றால் இருந்தால்த்தானே) என்ன தீர்ப்பு வழங்க இயலும் ? இதை வெள்ளைக்கார கிறித்தவரிடம்கேட்டேன் ..அவர் பாஸ்டரை கேட்டு பதில் சொலவதாக சொல்லி கிரேட் எஸ்கேப் . இந்த சந்தேகத்தை இங்கே யாராவது கிறித்தவ இசுலாமிய நண்பர்கள் தீர்க்க முடியுமா ?சும்மா தெரிந்து கொள்ள ஆசை

Advertisement