Load Image
dinamalar telegram
Advertisement

கேரளாவில் பரவும் புது காய்ச்சல்: அச்சம் வேண்டாம் என சுகாதார செயலர் அறிவுரை

Tamil News
ADVERTISEMENT
சேலம்: கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சல் குறித்து தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. அதில், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்படுவதுடன், உடல்வலி, சோர்வு, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், முகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல், வலியை தரும் பாதிப்பு போன்ற அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில், தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, அங்கு 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் ஆபத்து இல்லை எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் போன்ற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Latest Tamil Newsஇது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கும் எந்த தொடர்பும்இல்லை. இது ஒருவகையான காய்ச்சல்தான். இதனால் பெரிய பாதிப்பு இல்லை. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரும். இதனால், தக்காளி வைரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொல்லத்தில் பரவும் வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. அந்த வைரசை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு இந்த காய்ச்சல் பரவுகிறதோ?

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்