Load Image
dinamalar telegram
Advertisement

வாக்குறுதி குறித்து வாய் திறக்காத திமுக அரசு: எல்முருகன் விமர்சனம்

Tamil News
ADVERTISEMENT
தூத்துக்குடி: ஓராண்டாகியும் தேர்தல் வாக்குறுதி குறித்து திமுக அரசு வாய் திறப்பதில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர் கூறியதாவது: தமிழக அரசு தமிழக மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளில் என்ன சொன்னார்களோ அதை செய்வதற்கு தவறி உள்ளார்கள். சில பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஓட்டுகளை வாங்கிவிட்டு ஒரு வருடம் கழிந்தும் கூட தேர்தல் வாக்குறுதி குறித்து வாய் திறக்காதது கண்டனத்துக்கு உரியது. குறிப்பாக தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் கொடுப்போம் என்றார்கள். ஆனால் அது குறித்து எந்த இடத்திலும் வாயை திறப்பதில்லை.

திராவிட மாடல்மேலும் திராவிட மாடல், திராவிட மாடல் என சொல்லும் திமுக.,வினர் , பல கிராமங்களில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. பல கிராமங்களில் தனித்தனி மயானங்கள் உள்ளது. இது தான் திராவிட மாடல் அரசாக உள்ளது. சமுத்துவம் உள்ளதாக சொல்கின்றனர், என்ன சமத்துவம் உள்ளது? தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி அவை எல்லாம் காற்றில் பறந்து கொண்டு உள்ளது. சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்து உள்ளனர். பொய்யான தேர்தல் அறிக்கைகளை கொடுத்து விட்டு ஆட்சிக்கு வந்தபின் அதனை மறப்பது தான் திமுக.,வின் வாடிக்கை. அதைத்தான் திமுக செய்து கொண்டு உள்ளது.

Latest Tamil Newsஉள்ளாட்சி நிர்வாகம் மாநில அரசுக்கு உட்பட்டது, இதில் எங்கு மத்திய அரசு வந்தது என்பது ஆச்சரியமான விசயமாக உள்ளது. மத்திய அரசுக்கும் உள்ளாட்சி வரி விதிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆட்சிக்கு வந்ததும் ஏழை மக்கள் மீது நூறு சதவீத வரி என்பது திணிக்கப்பட்டு உள்ளது. நிலக்கரி குறித்து மத்திய அமைச்சர் தெளிவாக சொல்லி உள்ளார். நிலக்கரி தட்டுபாடில்லை, தமிழக அரசு கேட்டதை விட கூடுதலாக நிலக்கரியை மத்திய அரசு கொடுத்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பார்த்து கொண்டு இருக்கிறோம். ஆங்காங்கே லாக் அப் மரணங்கள் நடக்கிறது. பல இடங்களில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.

சர்வதேச நிலைக்கு ஏற்ப கேஸ் விலை ஏற்றம் இறக்கம் உள்ளது. ஒரு நேரத்தில் ஏற்றமாகவும் ஒரு நேரத்தில் குறையவும் செய்கிறது. அதே நேரத்தில் மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. பட்டிண பிரவேசத்திற்கு தடை விதிப்பது மிக மிக கண்டனத்து உரியது. தொடர்ந்து ஹிந்து கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிராக அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த அரசு சம அரசாக இருக்க வேண்டும், ஒரு அரசாங்கமானது ஒரு மதத்திற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கக்கூடியது. இது ஹிந்து மக்களை கோபப்படுத்தியுள்ளது, தக்க நேரத்தில் இதற்கு தக்கப்பதிலடி கொடுப்பார்கள். தமிழக அரசு தடைய திரும்ப பெறும் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (27)

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  ஆனால் வாக்குறுதி கொடுக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தப்பட பேனா மூடி திறந்துச்சே....

 • Samathuvan - chennai,இந்தியா

  உங்களைத்தான் எப்போ வந்து இந்த பல்லக்கை தூக்குவீங்கன்னு நாங்க எல்லோரும் எதிர் பார்த்துகிட்டு இருக்கிறோம்.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  ,,,,,

 • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

  பிரதமர் எரிவாயுவிற்கு வழங்கிய மானியத்தை எரிவாயு வாங்கும் போது கழித்துக்கொண்டதற்கு பதிலாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்த போது அப்போது வழங்கப்பட்ட மானியம் தொடரும் அதை ஒழிக்க மாட்டோம் என உறுதிமொழி அளித்தார் வசதியானவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். பெரும்பான்மையான வசதி படைத்தவர்களும் அரசு வழங்கும் சம்பளத்தில் எரிவாயு வாங்கவும் சம்பளம் வழங்கப் படுகிறது என அதனை அரசு ஊழியர்களும் விட்டுக்கொடுக்காத நிலையில் அவர்களுக்கெல்லாம் மானியத்தை ஒழிப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த மக்களுக்கும் மானியம் இல்லாமல் செய்யப்பட்டு விட்டதை(தற்போது அளிக்கும் மானியம் வாயுவை பெற அளிக்கும் லஞ்சத்திற்கும் குறைவு என்ற நிலையில் மானியம் ஒழிக்கப்பட்டு விட்டது என்றுதான் கொள்ளவேண்டும்) பார்க்கும் போது இந்த நாட்டில் அரசியல் வாதிகள் அனைவருமே மக்களை ஏமாற்றி பதவி சுகத்தை அனுபவிக்கவே விரும்புகின்றனர் என்பதை அறியலாம்.

 • அப்புசாமி -

  இவுரு அமைச்சராயி ஒரு வருஷத்துக்கும் மேலாகுதே... துரும்பாச்சும் தமிழகத்துக்கு, மீனவர்களுக்கு செஞ்சிருக்காரா?

Advertisement