ADVERTISEMENT
தஞ்சாவூர்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கெட்டுப்போன கோழிக்கறியால் செய்த ஷவர்மா மற்றும் பிரியாணிகளால் பலரும் உடல்நிலை பாதிக்கப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரியாணி, ஷவர்மா சாப்பிட்டவர்கள் மயக்கமடைந்து சிகிச்சையில் உள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் இருந்து நேற்று (மே 5) 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கட்டட தொழிலாளர்கள் சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட சிலர் அடுத்தடுத்து மயங்கியுள்ளனர். சிலருக்கு வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 27 பேர் உடனடியாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த பிரியாணி கடைக்கு சென்று அங்குள்ள உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து அந்த பிரியாணி கடைக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் இன்று பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பிரவீன், 22, பரமேஸ்வரன்,21, மணிகண்டன், 21, ஆகிய மூவரும் நேற்றிரவு ஒரத்தநாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில், ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். இரவு திடீரென மயக்கடைந்தனர். இதையடுத்து, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் இருந்து நேற்று (மே 5) 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கட்டட தொழிலாளர்கள் சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட சிலர் அடுத்தடுத்து மயங்கியுள்ளனர். சிலருக்கு வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 27 பேர் உடனடியாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த பிரியாணி கடைக்கு சென்று அங்குள்ள உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர்.

இனி ஷவர்மா சாப்பிட வாருங்கள் என்று யாரையாவது கூப்பிட்டால், அவர்கள் 'வேணாம்மா' என்று ஓட்டம் பிடிப்பார்கள். ஷவர்மா விட்பனை ஒழிந்தது...