தஞ்சாவூர்: தருமபுரம் பட்டின பிரவேசம் நடைபெறும் என அறிவித்ததால் தன்னை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் விழாவை மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‛தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்வை உயிரைக்கொடுத்தாவது நடத்துவோம். தருமபுரம் ஆதீன மடத்திற்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டின பிரவேச நிகழ்ச்சி ரத்துக்குக் காரணம்' என குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில், அண்மையில் உயர்மின் அழுத்த மின்கம்பி உரசிய விபத்தில் தீக்கிரையான அப்பர் பல்லக்கை, மதுரை ஆதீனம் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தருமபுரம் பட்டின பிரவேசம் நடைபெறும் என அறிவித்ததால் என்னை ஆளுங்கட்சியினர் மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்துள்ளது. அச்சுறுத்தல் தொடர்ந்தால் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவேன். மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்திற்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதா? ஹிந்து மதத்தை வெள்ளைக்காரர்களால் கூட அழிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மந்திரி தா. கி யும் அந்தப் பக்கத்துக்காரர்தான். கொஞ்சம் பாதுகாப்பாய் இருந்து கொள்ளுங்கள் ஆதீனம் அவர்களே.
ஏன் சார் ஈஸ்டர் அன்னிக்கி பெரிய சிலுவையையிலே கையிலே ஆணி அடிச்சிகிட்டயு இஷுத்டு வாரங்களே அது மனித உரிமை மீறல் இல்லையா? இல்லே மொஹரத்துக்கு சவுக்கால் அடிச்சிக்கிறதும் கத்தியால் உடம்ப கீறிக்கிறதும் மனித உரிமை மீறல் இல்லையா? அப்பா இந்து என்றல் திருடன்னு சொன்னாரு இவரு இந்துன்னா இளிச்ச வாயன்னு நினைக்கிறாரூ. சாது மிரண்டால் காடு கொல்லதுன்னு ஒரு பஷமோஷி இருக்கே அதெல்லாம் தெரியாதா?
மற்றவனை காசுக் காகவோ, பக்திக் காகவோ, கொள்கைக் காகவோ தனக்கு பல்லக்கு தூக்கச் செய்வது மனித உரிமை மீறல் ஆகும். யாரோ ஒருவன் தன்னை சிலுவையிலே கையில் ஆணி அடித்துக் கொள்வதும், மொஹரத்துக்கு சவுக்கால் அடிச்சிக்கிறதும் கத்தியால் உடம்ப கீறிக்கிறதும். அவர்களின் தனி மனித உரிமை. இரண்டும் வேறு வேறு கண்ணா
அப்படி அந்த பல்லக்கு தூக்குகிறவர்கள் யாராவது புகார் கொடுத்தார்களா காசுக்காக, பக்திக்காக எங்களை பல்லக்கு தூக்க மிரட்டுகிறார் என்று... இதுவும் தனி மனித உரிமைதான் அவர்கள் விருப்பத்தின் பேரில் தான் தூங்குகிறார்கள்....
அய்யா மகான் அவர்களே இந்த வீடியோ மூஞ்சி ஆட்சியில் யார் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது. உங்களை சுற்றி ஆயிரம் போலீஸ் நிறுத்தினாலும் அதிலிருந்து ஒருவன் கொன்று விடுவான். என் என்றால் போலீஸ் கைகள் காட்டப்பட்டுள்ளன.
கண்டு கொள்ள கூடாது,
//.. பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவேன்...//...மத்திய அரசிடம் முறையிட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள். எதையும் செய்யக்கூடிய படு பாதகர்கள் .
மத்திய அரசின் பாதுகாப்பில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மரணத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் தான் தனியாக விசாரணை கமிஷன் அமையாதது முந்தைய அதிமுக அரசு.. உள்துறை அமைச்சர், பிரதமர் இவர்கள் மீது நம்பிக்கை இருந்தால், அவர்களை அல்லவே முந்தைய அதிமுக அரசு அணுகி இருக்க வேண்டும்.. இன்னுமா அவர்களை நம்புகிறீர்கள்..
முன்னாள் மந்திரி தா. கி யும் அந்தப் பக்கத்துக்காரர்தான். கொஞ்சம் பாதுகாப்பாய் இருந்து கொள்ளுங்கள் ஆதீனம் அவர்களே.