Load Image
dinamalar telegram
Advertisement

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: ‛மகரிஷி சரக்சபத்' உறுதிமொழி விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் அவர் , டீனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் ‛ஹிப்போகிரட்டிக்' உறுதிமொழிக்கு பதிலாக, மாணவர் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உறுதிமொழிக்கு ‛மகரிஷி சரக்சபத்' உறுதிமொழியை ஏற்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேல் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் ‛மகரிஷி சரக்சபத்' உறுதிமொழி விவகாரம் முதல்வருக்கோ, பேராசிரியர்களுக்கோ தெரியாது என மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் விளக்கமளித்தார்.
Latest Tamil Newsஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‛மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளார். கோவிட் காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் நேரில் சந்தித்து அளித்த விளக்கத்தையேற்று முதல்வரின் உத்தரவுப்படி அவர் மீண்டும் அதே பணியில் ஈடுபட உள்ளார்' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (32)

  • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

    முதல்வரும் ரத்தினவேலுவும் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்கள் ..மாசு இவர்களை பார்த்து கற்றுக்கொள்ளலாம் .

  • ஆரூர் ரங் -

    எல்லாமே முடிஞ்சதா? நீங்க படிக்கிற காலத்துல இருந்து அந்த ஹாஸ்டல்🤔 மஹா மட்டமா இருக்கே. எதாவது பண்ணுவீங்களா?

  • DVRR - Kolkata,இந்தியா

    ஏன்???என்னாச்சி மாசு????ஒன்றிய ஆணையா???

  • M Ramachandran - Chennai,இந்தியா

    விடியலுக்கு தப்பான புரிதலை கொடுத்து விரைவாக கெட்டபெயரய் யாரோ சம்பாதித்து கொடுக்கிறார்கள். சொன்னாலும் தெரியாது தானாவும் திருந்தாது. பட்டால் தான் தெரிய போகிறது.குடும்பத்திய விளக்கி வைத்தால் உருப்படும்.

  • ஆரூர் ரங் -

    திமுக வை உறுத்தும் விஷயம். சுகாதாரத் துறை செயலாளர், து வே இருவரும் அவர்களுக்கு வேண்டாத இனம். கசப்பு 🤪தாளவில்லை. ஆனால் தவிர்க்க முடியாத நிலை. (ஆனால் டீன்? வாக்கு வங்கி உள்ள இனமாம். ) ஏதோ இரண்டு நாள் ஊடகங்களுக்கு நன்கு பொழுது போனது.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்