ADVERTISEMENT
புதுடில்லி: புதிய உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்றின் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஓய்ந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில், ஒமைக்ரான் வைரசின் உருமாறிய ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்று ஒரு சில நாடுகளில் பதிவானது. நம் நாட்டில் குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில், இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்றின் முதல் பாதிப்பை, 'இன்சகாக்' எனப்படும் கொரோனா மரபணு பகுப்பாய்வு கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால், அது எந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இது மிகவும் வேகமாக பரவக் கூடியதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உலக நாட்டு மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ பழகி விட்டனர். 2020 -ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்த அந்த பயம் இன்று அறவே இல்லை. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இயல்பு வாழ்க்கையை வாழ மக்கள் தொடங்கி விட்டனர். மாஸ்க் அணிவதில்லை, எங்கு நோக்கினும் கடல் போல் மக்கள், கண்ட இடத்தில் கண்டதை தின்கின்றனர். இதெல்லாம் எங்கு போய் முடியப்போகிறதோ...???