Load Image
dinamalar telegram
Advertisement

ரஷ்யா - உக்ரைன் போரில் யாருக்கும் வெற்றியில்லை: பிரதமர் மோடி கருத்து

Tamil News
ADVERTISEMENT
பெர்லின் : ''உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் எந்தத் தரப்புக்கும் வெற்றியில்லை; அனைவரும் பாதிப்பையே சந்திக்க நேரிடும். அதனால்தான் அமைதியின் பக்கத்தில் இந்தியா நிற்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்கிறது. இதில் உக்ரைனுக்கு அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐ.நா.,வில் தாக்கல் செய்யப்பட்ட பல தீர்மானங்களின்போது, ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கியிருந்தது.

இந்நிலையில், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று, ஜெர்மனிக்கு சென்ற அவருக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Latest Tamil News
இதைத் தொடர்ந்து, ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை அவர் சந்தித்தார். அங்கு மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இருவரும் தனியாக சந்தித்துப் பேசினர். கடந்தாண்டு பிரதமராக பதவியேற்ற ஸ்கால்சை, மோடி முதல் முறையாக சந்தித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களும், இரு தரப்பு உறவுகள், சர்வதேச பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.

பின், இரு நாடுகளுக்கு இடையேயான ஆலோசனைக் குழுவின் ஆறாவது கூட்டம் நடந்தது. இதில், இந்திய தரப்பில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வரும், 2030க்குள் மாசில்லா மின்சார உற்பத்திக்கு மாறுவதற்காக, இந்தியாவுக்கு, 76 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வழங்க ஜெர்மனி முன்வந்துள்ளது. இந்த சந்திப்புகளுக்குப் பின், இரு தலைவர்களும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, மோடி கூறியதாவது :

இந்தியா, ஜெர்மனி இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த பயணம் அமைந்துள்ளது.


உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் யாருக்கும் வெற்றி கிடைக்கப் போவதில்லை. இந்தப் பிரச்னையால், அனைவரும் கடுமையான பாதிப்புகளையே சந்திக்க நேரிடும். அதனால்தான், அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது.

போர் துவங்குவதற்கு முன்பாகவே, பேச்சு மூலம் தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தினோம். உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

இந்தப் போரால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள், உரங்கள் என, அனைத்துக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது உலகின் ஒவ்வொரு குடும்பத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.மோடியை கவர்ந்த குழந்தைகள்


ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தான் தங்கும் ஹோட்டலுக்கு சென்றார். வழியெங்கும் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 'வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்டனர்.
ஒரு இடத்தில் காரை நிறுத்திய மோடி, அங்கிருந்த இந்தியர்களை சந்தித்தார். அப்போது, அசுதோஷ் என்ற சிறுவன், தேசப்பக்தி பாடல்களை தொடர்ந்து பாடினார். அவருக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். மான்யா மிஸ்ரா என்ற சிறுமி, தான் வரைந்த மோடியின் படத்தை அவருக்கு பரிசாக அளித்தார். அவருடன் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • அப்புசாமி -

    நேட்டோவில் புது நாடுகளை சேக்க மாட்டோம்னு அமெரிக்கா சொல்லாது. ரஷியா அதைத் தடுக்காமல் விடாது. அங்கே நடப்பது பினாமி யுத்தம். அதாவது proxy war. முன்னாடி கோல்ட் வாரா இருந்தது. நடுநிலைமையா இருக்கோம்னு சொல்லிக்கிட்டிருந்தா வேலைக்கு ஆகாது. நமது இன்றைய முடிவுகளுக்கேற்ப பலன் கிடைக்கும். எனக்கென்னவோ, இது சில நாடுகளை சமாதானப் படுத்தற முயற்சியாவே தெரிகிறது. ஜெர்மனி போன சுருக்கிலே 10 பில்லியன் டாலருக்கு காண்டிராக்ட் குடுத்தாச்சு. இன்னும் ஃப்ரான்சுக்கும், டச்சுக்கும்குடுக்கணும்.

  • அப்புசாமி -

    நீங்க சொன்னா புட்டின் கேப்பாருன்னு சொன்னாங்களே... அது போகுது. ஐ.நா வாக்கெடுப்பின்போது போர் வாணாம்னு சொல்லியிருக்கலாமே..

Advertisement