Load Image
dinamalar telegram
Advertisement

ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை: ஸ்டாலின் பேச்சு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: ‛ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை' எனப் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு தொண்டாற்றலாம், ஆட்சியில் இல்லை எனில் மக்களுக்குப் போராடலாம்' எனவும் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியில் இருந்து 3000 பேர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக.,வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழருக்காக குரல் கொடுப்பது திமுகதான். திமுகதான் விடிவெள்ளி, உற்ற தோழன், நம்மை காக்கும் பேரியக்கம் என்ற நம்பிக்கையோடு அனைவரும் இணைய வந்துள்ளீர்கள். திமுக.,வின் வரலாறு என்பது 73 ஆண்டுகளைக் கொண்டது. இன்னும் 2 ஆண்டுகளில் திமுக 75வது ஆண்டை கொண்டாட இருக்கிறது.

1949ம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுக தொடங்கப்பட்டது. ஆனால், உடனே தேர்தலை சந்திக்கவில்லை. 1957ல் திமுக முதன் முதலாக தேர்தல் களத்தில் இறங்கியது. அப்போது 15 இடங்களில் திமுக வென்றது. 1962ம் ஆண்டு தேர்தலில் திமுக 50க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று எதிர்க்கட்சியானது. 1967ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம். 1971ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தோம்.
Latest Tamil News1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் நெருக்கடி நிலைமை அமல்படுத்தப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1989ல் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 2011க்குப் பிறகு இப்போது கடந்த தேர்தலில் வென்று உங்களில் ஒருவனாக இருக்கக் கூடிய ஸ்டாலின் ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை; ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு தொண்டாற்றலாம். ஆட்சியில் இல்லை எனில் மக்களுக்குப் போராடலாம் என்பதுதான் திமுக.

தற்போதைய ஆட்சியில் அரசு பணிகள் தமிழருக்குதான் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு தகுதி தேர்வாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் அன்னை தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. தமிழ் மொழியில் மாவட்ட அரசு ஊழியர்கள் கையெழுத்து போட்டாகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போமோ அதைவிட பலமடங்கு சாதனைகளை நாம் ஓராண்டில் செய்திருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (81)

 • raja - Cotonou,பெனின்

  எப்படிப்பா ஒரு வருட குழந்தை இருவது வருட சாதனை செய்தது.. தமிழர்கள் என்ன கேணையர்களாக நினைத்து விட்டதா இந்த கேடுகெட்ட திருட்டு திராவிட ஓங்கோல் தெலுங்கு கூட்டம்.....

 • s t rajan - chennai,இந்தியா

  பல முறை குஜராத் முதல்வராக இருந்து பின் பிரதமராக இருக்கும் திரு மோடி அவர்களின் வருமானம், அவரது personal சொத்து முலதனங்கள் + அவரது மொத்த குடும்பத்தினரின் சொத்துக் கணக்கையும், மிகுந்த எளிமையாக வாழும் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் சொத்துகளையும் வருமானத்தையும் ஒரு comparison செய்து பின் சொல்லுங்க முதல்வரே.. இதை ஏதாவது ஒரு பத்திரிகையோ, அல்லது டீவி சேனலோ ஒரு ஆய்வு செய்து எல்லா மொழிகளிலும் எல்லா மாநிலங்களிலும் வெளியிட்டால் நம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த சேவையாக இருக்கும்.

 • Siva Kumar - chennai,இந்தியா

  பதவி என்பது சொகுசு இல்லை என்பது புரியவே இந்த ஆளுக்கு இத்தனை வருடம் ஆயிருக்கு.

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  சொகுசு வாழ்க்கை என்றால் என்ன ஸ்டாலின் மூன்று சாப்பிடுபவன் சமயத்தில் ஒரு வேலை சாப்பிடுகிறான். நீ பதவியில் இருக்கிறாய் இப்போது சுட்டெரிக்கும் வெயிலில் உன்னால் அறிகண்டிஷன் இல்லாமல் இருக்க முடியாது ஆனால் தினமும் உழைத்து விட்டு களைப்புடன் வருபவன் படுக்க இடம் கூட இல்லாம ரோட்டில் தூங்குகிறான். நீ ஜாலியாக டுபாய் சென்று சொகுசாக சுற்றி பார்த்து விட்டு வருகிறாய் அதுவும் குடும்பத்த்தோடு. இதற்க்கு பெயர் என்ன..ஸ்டாலின் ஆட்சியில் என்னவோ சாதனனைகள் செய்து விட்டதாக பெருமை பட்டு கொள்ளாதே. எல்லாம் காசு கொடுத்து கூட்டி வரும் கூட்டம். நீ பேசும் பொது கூட்டத்தில் ஒருவர் எழுந்து பெட்ரோல் டைசல் என்னவாயிற்று என்று கேட்டார் அந்த ஆளை உன் பாதுகாப்பு ரவுடிகள் கடத்தி விட்டனர். இந்த பதினோரு மாத ஆட்சியில் கண்டதெல்லாம் வேதனை விடியவே மாட்டேன் என்கிறது.

 • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

  நம்ம தளபதி இப்பதான் ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறார் போலும் மோதினால் செய்யுறதாலே கொஞ்சம் மலைபாய்ட்டாரு ஆடி பொய் ஆவடி வந்தா சும்மா பொங்கி ஆட்சி பண்ணிருவாரு

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்