ADVERTISEMENT
புதுடில்லி: கடந்த ஏப்., மாதம் ஜி.எஸ்.டி., வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இதற்கு முன்னர் மார்ச் மாதம் வசூலான 1.42 லட்சம் கோடி தான் அதிகமாக இருந்தது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏப்., மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.1,67,540 கோடியில்
சிஜிஎஸ்டி - ரூ.33,159 கோடி
எஸ்ஜிஎஸ்டி- ரூ.41,793 கோடி
ஐஜிஎஸ்டி- ரூ.81,939 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.36,705 கோடி உட்பட)
செஸ்-ரூ.10,649 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.857 கோடி உட்பட) அடங்கும்.

இந்த வசூலானது, கடந்த ஆண்டு(2021) ஏப்., மாதம் வசூலான 1.42 லட்சம் கோடியை காட்டிலும் ரூ.25 ஆயிரம் கோடி அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (31)
இப்போது முறையாக வரிவசூல் நடக்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய வரி நேரடியாக இத்தாலி சோனியா குடும்பத்திற்கு சென்றது.
இப்ப பாருங்களேன், ஜிஎஸ்டின்னா என்னானு கூட தெரியாம மோடிஜி ஒழிக என்று சொல்லிக்கொண்டு கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகள் கமெண்ட் எழுத வந்துவிடுவார்கள்.
அனைத்து விதத்திலும் மக்களிடம் வரியை உறிஞ்சி எடுக்குறதுக்கு பேரு சாதனையை.... ஐயோ கடவுளே...
இது ஒன்னும் சாதனை இல்லை.. எல்லாம் ஆர்சிஎம்மில் கட்டிய பணம் அதை அவுங்களே எடுத்துக்குவாங்க.. அப்புறம் என்ன அரசுக்கு பேப்பரில் மட்டும் வரி வசூல் இருக்கும்.. வங்கியில் எப்பவும் போல வருவது தானே வரும்.. இதெல்லாம் ஒரு சாதனை என்று சொல்லிகிட்டு... நீங்க வேற.. ...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
புடலங்காய் இதில் சாதனை என்ன இருக்கிறது. யாரோ வியாபாரம் செய்கிறார்கள் வரி காட்டுகிறார்கள் அவ்வளுவுதானே .