Load Image
dinamalar telegram
Advertisement

சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது தான் தமிழ்: ஹிந்தி நடிகை போட்டார் குண்டு

Tamil News
ADVERTISEMENT
ஹிந்தி மொழி பற்றிய சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் தோன்றின. ஆகவே சமஸ்கிருதத்தை ஏன் தேசிய மொழியாக ஆக்க கூடாது என தெரிவித்துள்ளார் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்.

பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களை பேசி சமயங்களில் வம்பில் மாட்டிக் கொள்வார். மும்பையில் தனது பட விழாவில் பங்கேற்ற இவரிடம் சில தினங்களுக்கு முன்னர் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் ஹிந்தி மொழி வார்த்தை சண்டை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு கங்கனா அளித்த பதில் : ‛‛ஹிந்தி தேசிய மொழி என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்துள்ளது. அதனால் அஜய் தேவ்கன் கூறியதில் தவறில்லை. அதேசமயம் சுதீப்பின் உணர்வையும் புரிந்து கொள்கிறேன். ஹிந்தியை ஏற்காவிட்டால் மத்திய அரசையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். எப்போதும் வட இந்திய படங்கள், தென்னிந்திய படங்கள் என விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. இது வருத்தமளிக்கிறது, இது தேவையற்ற விவாதம்.

Latest Tamil News
இங்கு நாம் மொழிவாரியாக வேறுபட்டு கிடக்கிறோம். இதை ஒன்றிணைக்க ஒரு பொதுவான மொழி அவசியம். ஹிந்தியை விட தமிழ் பழமையான மொழி. ஆனால் தமிழை விட பழமையான மொழி சமஸ்கிருதம். அதனால் சமஸ்கிருத மொழியை ஏன் தேசிய மொழியாக்க கூடாது. ஏனென்றால் தமிழ், குஜராத்தி, கன்னடம் போன்ற மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை.

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் அந்நாட்டு மக்கள் அவர்களின் தாய் மொழியில்தான் பேசுகின்றனர். ஆனால் காலனி ஆதிக்க வலராற்றால் துரதிர்ஷ்டவசமாக ஆங்கிலம் நமது இணைப்பு மொழியாக இப்போது மாறிவிட்டது. இணைப்பு மொழியாக ஆங்கிலமா, ஹிந்தியா, சமஸ்கிருதமா அல்லது தமிழா எது இருக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் மனதில் வைத்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். என்னை பொருத்தமட்டில் சமஸ்கிருதம் பழமையான மொழி. ஆனால் இந்த மொழி பள்ளிகளில் கூட கட்டாயமாக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை.

இவ்வாறு கங்கனா கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (160)

 • வால்டர் - Chennai,இந்தியா

  கங்கனா ரணாவத் - முதலில் தாங்கள் குறைந்த பட்சம் ஒரு இளங்கலை பட்டம் தமிழில் பெறுங்கள். இந்த ஜென்மத்தில் அது தங்களால் முடியாத காரியம். எதன் அடிப்படையில் இந்த நடிகை இந்த கருத்தை கூறினார் என்று சற்றும் விளங்கவில்லை. தாங்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றுங்கள் தூய தமிழில் அதன் பிறகு தங்களது கருத்துக்களை பரிசீலிக்கலாமா வேண்டாமா என்று பார்ப்போம். தங்களது நோக்கம் என்னவோ?

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  அவர்கள் லோகம் என்கிறார்கள். நாம் உலகம் என்கிறோம். உலகம் என்ற வார்த்தை முதலில் தோன்றியதா? லோகம் என்ற வார்த்தை தோன்றியதா? தமிழில் முக்கியமான எல்லா இலக்கியங்களும் இறை வாழ்த்தாக பாடும்போது உலகம் என்ற வார்த்தை இல்லாமல் இல்லை. ஆதிபகவன் முதற்றே உலகு. உலகம் யாவையும்-ராமாயணம். உலகமெலாம் உண்ர்ந்து பெரியபுராணம். உலகம் உவப்ப -சிலப்பதிகாரம், ஸம்ஸ்கிரித வார்த்தைகளை தவிர்த்து யாரும் தமிழ் பேச முடியுமா? என்றால் சந்தேகமே. தமிழின் முதல் மாணாக்கர் அகஸ்தியர். ஸ்டாலின் போல அவர் பெயரிலும் ஸ் இப்போ அகத்தியர் என்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் சம்ஸ்கிருதம் கலந்திருக்கிறது. எப்படியா இருந்தாலும் தமிழ் தனித்துவம் வாய்ந்த மொழி தான். வேறு எந்த மொழியுடனும் ஒப்பிடமுடியாத மொழி தான். இங்கே தமிழில் இரண்டு வார்த்தை படித்து கொள்ளலாம் என்று கேட்பார்கள். எனக்கே தயக்கமா இருக்கும் கற்று கொடுக்க ஏனா அவர்கள் வாயில நுழையாது. இந்தியின்னா ஸ் புஸுன்ன இருப்பதால் பேச வந்துவிடும். கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மொழி என்றால் அது ராமசாமி சொன்னது போல காட்டுமிராண்டி மொழி தான்.கம்பரே ராமாயணத்தை சம்ஸ்கிருதத்தில் இருந்து தானே மொழி பெயர்த்திருக்கிறார். சம்ஸ்கிருத கலப்பெ இல்லாமல் திருவள்ளுவர் கம்பர் காலத்திற்கு முந்தி தமிழ் இருந்திருக்கலாம் எந்த மொழி எங்கிருந்து வந்தாலும் அந்த மொழியால் நமது மொழிக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க செய்வது நமது கடமை.

 • Ramamurthy Ramani - Chennai,இந்தியா

  எல்லா மொழிக்கும் இணைப்பு ஒரு APP போதுமே. translation பண்ணி புரிந்துகொண்டால் போதும். அந்தந்த மொழியின் சிறப்பு அதை கற்கும் பொது தெரியும். சீறாபுராணம் எழுதிய Geosapbeski தமிழ் கற்றுக்கொண்டு பண்டிதர் ஆனார். இதை அவரவர் இச்சைக்கு விடுவதுதான் இந்தியாவுக்கு நல்லது.

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  /இணைப்பு மொழியாக ஆங்கிலமா, ஹிந்தியா, சமஸ்கிருதமா அல்லது தமிழா எது இருக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்/ - அதைத்தான் தமிழர்களாகிய நாங்களும் கூறுகிறோம். ஹிந்தி மட்டும் இணைப்பு மொழி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் அல்லது ஒரு தென் இந்திய மொழியும் தொடர்பு மொழியாக வேண்டும். அதுவே பரந்துபட்ட இந்தியாவுக்கு நல்லது

 • Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா

  எந்த மொழி அறிவும் அற்ற இழிமகளா இதைப் பற்றி பேசுவது?

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்