மாநில மொழிகளில் சட்டப்படிப்பு பிரதமர் மோடி ஆதரவு

மேலும் பிரதமர் பேசியதாவது: கோர்ட் கட்டமைப்புகளை இன்னும் வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தொழில்நுட்பம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமானதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமற்றதாகக் கருதப்பட்டது. கடந்த ஆண்டில் உலகளவில் நடந்த மொத்த பண பரிமாற்றத்தில் 40 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளது .
சட்டத்துறையில் டிஜிட்டல் மயம் ஆக்கும் முயற்சிகள் அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுவானதாகி வருகிறது.
சட்டங்களும், உத்தரவுகளும் தெளிவான பார்வை கொண்டதாக இருக்க வேண்டும். தீர்ப்புகளின் போது மனித உணர்வுகள் தொடர்பான விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.காலாவதியான சட்டங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். சட்டப்படிப்புகள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும்.
சட்டப்படிப்புகள் சொந்த மொழிகளில் படிக்கும் நிலை வர வேண்டும். இதனை ஊக்குவிக்க வேண்டும். இது சட்டம் படிக்கும் சாதாரண மக்களுக்கு நம்பிக்கையை தரும். படிப்புடன் இணைந்திருக்க ஏதுவாக இருக்கும் .இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பொதுநல வழக்கா, தன்னல வழக்கா ? நீதிபதி கவலை
விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசுகையில்: கோர்ட்டில் வழக்கில் உள்ள மொழியை ஆதரிக்க வேண்டும் .கோர்ட் உத்தரவுகளை அரசுகள் மதிக்க வேண்டும். உத்தரவுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. சமீப காலமாக பொது நல வழக்குககள் தன்னல நோக்கம் கொண்டதாக மாறியுள்ளது. தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதாக உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி ரமணா பேசினார்.
வாசகர் கருத்து (6)
மிகவும் நல்லது அப்போதுதான் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியும் வெளிநாட்டு வேலை கனவுதான்
சரி எல்லாம் தெரிந்தவரே..... உண்மை என்னன்னு நீங்க சொல்லுங்களேன்........நீதிமன்ற விதிப்படி ஒரு அமர்வு விசாரிக்கும் வழக்கை கடைசிவரை அந்த அமர்வுதான் விசாரிக்கவேண்டும்......அந்த அமர்வில் இருக்கும் நீதிபதிகள் ஒய்வு பெற்றாலோ அல்லது தாங்களாகவே விலகிக்கொண்டாலோ மட்டுமே வேறு அமர்வு குறிப்பிட்ட வழக்கை விசாரிக்கும்.....இதுதான் நீதிமன்ற நடைமுறை. இந்த வழக்கை முதலில் விசாரித்த அமர்விலிருந்து யாரும் ஒய்வு பெறவும் இல்லை விலகிக்கொள்ளவும் இல்லை.....பிறகு ஏன் இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது...?......கதை சொல்வதும் அந்தக் கதையை மக்களை நம்ப வைப்பதற்காக வரலாற்றையே மாற்றி எழுத முயற்சிப்பதும், கோயபல்ஸ் போன்று சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயற்சிப்பதும், கண்ட கதையையும் சொல்லி காதில் பூ சுற்றுவதும் உங்களுக்கும் உங்களது எஜமானர்களுக்கு கை வந்த கலை ஆயிற்றே.......
இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழில் சரியாக எழுதவும் தெரியாது. ஒரு சிறிய சொற்பிழை இருந்தாலும் வழக்கு தோல்வியடைவது நிச்சயம் . ஆங்கிலம் வெகு தூரம். 😛நிறைய பேர் கட்டப் பஞ்சாயத்து வக்கீலாக ஆகத்தான் படிக்கிறார்களோ?.
மாநில மொழிகளில் சட்டக்கல்வி அளிக்கப்பட்டாலும் , மாநில மொழியில் வாதாடுவதென்பது , மாவட்ட கோர்ட்டுகள் வரையில் மட்டுமே ..உயர் நீதி மன்றம் , உச்ச நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் வழக்காடுதல் மட்டுமே சரிப்பட்டு வரும் ....சட்டவரைவுகள் ,பிரிவுகளில் ஐயம் எழும்போதும் , பிரச்சினைகள் எழும்போதும் ஆங்கில மொழி வரைவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது .....மாநில மொழியில் சட்டம் பயில்பவர்கள் , பிரிட்டிஷ் காலம் மாதிரி நாட்டு வக்கீல்கள் ஆகத்தான் முடியும் ......ஆங்கில புலமை சட்டத்துறைக்கு மிகவும் அவசியமான ஒன்று
தீர்ப்புகள் மனித உணர்வுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நீதித்துறைக்கு எச்சரிக்கையை விட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்