Load Image
dinamalar telegram
Advertisement

பதவியை துறந்தார் பழனிசாமி: சேலம் புறநகர் மா.செயலாளராக இளங்கோவன் நியமனம்

Tamil News
ADVERTISEMENT
அ.தி.மு.க.,வில், 11 ஆண்டுகளுக்கு பின் தன் பதவியை விட்டுக்கொடுத்தார் முன்னாள் முதல்வர் பழனிசாமி. சேலம் புறநகர் மாவட்ட செயலராக இளங்கோவன் நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் புறநகர் மாவட்ட செயலராக, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் மாவட்ட அவைத்தலைவராக ஆத்துார் அர்ச்சுணன், மாவட்ட இணை செயலராக ஈஸ்வரி; துணை செயலர்களாக தங்கமணி, வேலுமணி, மாவட்ட பொருளாளராக ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர்களாக ஆத்துார் ராமகிருஷ்ணன், சங்ககிரி வெங்கடாஜலம், ஏற்காடு பொன்.தனபாலன், இடைப்பாடி ராஜா, கெங்கவல்லி பிச்சை, வீரபாண்டி விஜயா, ஓமலுார் மல்லிகா, மேட்டூர் மணிசித்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Latest Tamil Newsகடந்த, 25ல், சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், கட்சி அமைப்பு தேர்தல் மனு வாங்கும்போது, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மனு செய்தார். அப்போது அவர், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனையும், மாவட்ட செயலருக்கு மனு அளிக்க செய்தார்.

மாவட்ட செயலராக பழனிசாமி மீண்டும் வருவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது 'நிழல்' நிர்வாகியாக செயல்படும் இளங்கோவனை, அக்கட்சி தலைமை மாவட்ட செயலராக அறிவித்துள்ளது கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியது. 2011 முதல் மாவட்ட செயலர் பதவியை வைத்திருந்த பழனிசாமி, 11 ஆண்டுக்கு பின், அப்பதிவியை விட்டுக்கொடுத்து, தன் தீவிர ஆதரவாளரான இளங்கோவனுக்கு அப்பதவியை வழங்கியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

  • sankar - சென்னை,இந்தியா

    சேலம் இளங்கோவனா. இனி அதோ கதி தான். எப்பேர்பட்ட சாய்ஸ். மெ.ச்சிக்கலாம

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    பின்ன இவர் ஜெயிலுக்கு போனால் , இவரிடம் சசி பதவி கொடுத்துவிட்டு போன இவர் அவரையே ஏமாத்தி விட்டார் அந்த கவனம் , அதே நிலை

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஆக, பழனிசாமி ராஜினாமா செய்து ஸ்டாலினின் நெடுநாளைய கோரிக்கையை நிறைவேற்றிவிட்டார் .

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    நட்பு, பந்தம், பாசத்தினால் நண்பருக்கு பதவியை விட்டுக்கொடுக்கும் முறைமை வாரிசு அரசியலைப்போன்றதுதானே.....

  • raja - Cotonou,பெனின்

    இது ஜனநாயகம் ஜனநாயகப்படி நடக்கும் கட்சி... இங்கே இருக்கிறதே மற்றொரு கொள்ளை கூட்ட குடும்ப கச்சி அப்பனுக்கு பிறகு மகன் மகனுக்கு பிறகு பேரன் இப்படி போகும் ...... எல்லா மட்டத்திலும் அது அரசு பதவியை இருந்தாலும் சரி, கச்சி பதவியா இருந்தாலும் சரி கேடுகெட்ட குடும்ப பரம்பர ஆட்சிதான்....தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் இந்த குடும்ப கொள்ளையர்களை....

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்