தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழாவில், அதிகாலையில் நடந்த தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண தொகையை வழங்கினார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறி சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
விபத்து குறித்து அறிந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட அனுப்பி வைத்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அரசின் சார்பில் ஆறுதலை கூறியதுடன், நிவாரண தொகையை வழங்கினேன். படுகாயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்
இச்சூழலை பயன்படுத்தி கொண்டு, இதனை அரசியலாக்க சிலர் விரும்புகின்றனர்.அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அரசியல் செய்ய விரும்பவில்லை. மக்களுக்கு துயரம் ஏற்படாமல் தடுப்பது அரசின் நோக்கம். மக்கள் துயரத்தில் இருக்கும் போது அதில் பங்கு கொண்டு அரசு இருக்க வேண்டும் என்பது இலக்கு. அதனை நோக்கியே பயணிப்போம் என்பதை சொல்ல கடமைப்படடுள்ளேன். விபத்து ஏன் நடந்தது குறித்து ஆய்வு நடக்கிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.
வாசகர் கருத்து (8)
அப்ப அவியல் பண்ணுனது யாரு? அது நாற வாயோ?
அரசியலும் செய்ய வராது அவியலும் செய்ய வராது😇😇 வெறும் தத்தி
செம்ம காமெடி நம்ம கைப்புள்ள.எதிர் கட்சி தலைவராக இருந்த பொது நாங்கள் அரசியல் செய்யாமல் என்ன அவியலா செய்யணும். அதைத்தான் இப்போது எதிர் காட்சிகள் செய்கின்றன. உனக்கு வந்தா ரத்தம்.மாதவனுக்கு வந்தா தக்காளி சட்னியா.திருட்டு தியமுக்க கர்த்தரின் சீடர் விடியல் பாவாடைகள் போட்ட பிச்சை அரசு தமிழ் நாட்டை ஒரு வழி செய்யாமல் போகாது.
நீங்க எதிர்கட்சியாக இருந்த பொழுது என்ன செய்தீர்களோ அதையே இப்போது எதிர்கட்சிகள் செய்கின்றன
பின் அவியல் செய்யப் போகிறாரா??