ADVERTISEMENT
சென்னை: சென்னை ராஜிவ்காந்தி மருத்துவனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகளை மீட்க சென்ற டாக்டர்கள் மூச்சு திணறலால் ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2வது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் பிரிவில் முகக்கவசம், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கல்லீரல் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் உள்ளேயே சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கல்லீரல் பிரிவில் சிக்கியிருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தால் அதிகளவில் புகை எழுந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்கிடையே மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்ட அறையில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்று வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். திடீர் தீ விபத்தால் அந்த கட்டடம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. நரம்பியல் வார்டில் நோயாளிகளை மீட்க சென்ற 5 டாக்டர்கள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2வது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் பிரிவில் முகக்கவசம், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கல்லீரல் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் உள்ளேயே சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கல்லீரல் பிரிவில் சிக்கியிருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாசகர் கருத்து (15)
ஒருவருக்கும் பாதிப்பு இல்லை என்று சன் டிவிக்கு சுகாதார செயலாளர் பேட்டி கொடுத்தாரே அது பொய்யா..
கடவுள் எல்லோரையும் காப்பாற்றட்டும். தீயணைப்பு வீரர்களின் முயற்சி வெற்றியடையட்டும்.
தமிழகத்தில் நடைபெறும் சகுனங்கள் சரியில்லை ஆட்சியாளர்கள் தயவுசெய்து கவனிக்கவேண்டும்
Vidiyal Arasin sathanai. Excellent governance
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் ICU வில் தான் கிடக்கு.