Load Image
dinamalar telegram
Advertisement

புது வீடு, கார், பைக் என ஏகபோக ஜாலி; கட்டு கட்டாக பணம் திருடிய கட்டட மேஸ்திரிகள்

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர் : கட்டட வேலை செய்ய வந்த வீட்டில், கட்டுக்கட்டாக பணம் திருடிய மேஸ்திரிகள் மற்றும் தொழிலாளர்கள் போலீசில் சிக்கினர்.

திருப்பூர், குள்ளேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 73. பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவன வளாகத்திலேயே வீடும் உள்ளது. இவருக்கு, மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. வீட்டில் துரைசாமி, அவரது மனைவி தனலட்சுமி மட்டும் வசிக்கின்றனர். இந்த வீட்டுக்கு எதிரே, துரைசாமிக்கு சொந்தமான பழைய வீடும் உள்ளது; அதை பயன்படுத்துவதில்லை.

கடந்த ஜன., 3ல் தன் பழைய வீட்டில், 2 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாய் மற்றும் பத்திரங்களின் நகல்கள் திருடு போனதாக துரைசாமி போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த கட்டட மேஸ்திரிகள் சதீஷ், 29, அவரது தம்பி சக்தி, 24, தொழிலாளர்கள் தாமோதரன், 33 மற்றும் ராதாகிருஷ்ணன், 53 ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

துரைசாமி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை, மூட்டை கட்டி மூன்று முறை கொள்ளையடித்தது தெரிந்தது. கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது கூட தெரியாமல், மூன்றாவது முறையாக பணம் திருடப்பட்ட பின்னரே, துரைசாமி போலீசில் புகார் செய்துள்ளார்.
Latest Tamil Newsபோலீசார் கூறியதாவது: கடந்த 2020 நவம்பரில் நான்கு பேரும் துரைசாமியின் பழைய வீட்டில் காம்பவுண்ட் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வீட்டின் ஓர் அறையில், பணம் கட்டுக்கட்டாக வெள்ளை துணிப்பையில் மூட்டையில் கட்டி துரைசாமி வைத்துள்ளார்.இதை மோப்பம் பிடித்த கொள்ளையர்கள், முதல் தடவை பணத்தை மூட்டையாக கட்டி, கொள்ளையடித்து சென்றனர். அதன்பின், டிச., மற்றும் ஜன., மாதம் மீண்டும் கொள்ளையடித்தனர். இவ்வாறு 2 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சொகுசு வாழ்க்கைகொள்ளை அடித்த பணத்தில், மூன்று மாதங்களாக திருப்பூர், திருவண்ணாமலையில் ஜாலியாக செலவு செய்து, சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர். சகோதரர்கள் சதீஷ், சக்தி ஆகியோர் திருவண்ணாமலையில், புதிய கார், புல்லட் இரு சக்கர வாகனம் வாங்கி வலம் வந்துள்ளனர். கட்டட தொழிலாளர்கள் திடீரென சொகுசு வாழ்க்கை பற்றி அறிந்த போலீசார் நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 சவரன் நகை, 16 லட்சம் ரூபாய், இரண்டு கார், இரண்டு டூ - வீலர், நான்கு வீட்டு பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆளுக்கொரு வீடுதிருப்பூர் துரைசாமி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில், நான்கு பேரும், வீரபாண்டி, கணபதிபாளையம், மங்கலம் ரோடு ஆகிய இடங்களில், ஆளுக்கொரு வீடுகளை, இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கியுள்ளனர்.அதன்பின், ஒரு புதிய கார், புல்லட் பைக் மற்றும் தங்க நகைகளை வாங்கியுள்ளனர். மிச்சமிருந்த பணத்தை சொகுசாக செலவு செய்து, 'ஜாலி'யாக ஊர் சுற்றியுள்ளனர்.வாசகர் கருத்து (11)

 • RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்

  பல நாள் திருடன் ஒரு நாள்

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  கோடிக் கணக்கான ரூபாயை ஒழுங்காக வரி கட்டி வெள்ளையாக்கியிருந்தால் அக்கவுண்டிலேயே இருந்திருக்கும்.... இப்போ கொள்ளை போனது எத்தனை கோடின்னு கூடத் தெரியாமல் ஒருத்தர் இருக்காருன்னா அவரிடம் எவ்வளவு பணாம் இருந்திருக்க வேண்டும்.... முறையாக விசாரித்து அவரது வருமானத்திற்கு வரி அபராதம் வட்டி என அனைத்தையும் வசூலிக்க வேண்டும்....

 • duruvasar - indraprastham,இந்தியா

  கூட்டு கொள்ளை கூட்டு பலாத்காரம் என ட்ராவிடின் மாடல் களை கட்ட தொடங்கிவிட்டது

 • Manguni - bangalore,இந்தியா

  திமுக கட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது. தங்கள் திறமைக்கு அதுவே சரியான இடம்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இந்த பதிவை நான் காவல்துறைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே புகாராக கொடுத்திருந்தேன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, உண்மையைத்தான் கூறுகிறேன் திருட்டு வழக்கில் தண்டனை பெற்று சிறைச்சாலைக்கு சென்றவர்கள் இது போன்ற கட்டுவேலைகளுக்கு வருவது சகஜம், அவர்கள் சென்ட்ரிங் பலகை அடிப்பவர்கள் போல் கூட்டத்தோடு கூட்டமாக வருவார்கள் அக்கம் பக்கத்தில் நடப்பவைகளை நோட்டமிடுவார்கள் . குறிப்பாக வீடுகளில் வசிப்பவர்கள் உரத்த குரலில் எல்லாவற்றையும் பேசுபவர்கள் பேசுவதை ஒட்டு கேட்ப்பார்கள் அதே போன்று ஜன்னல் கதவை திரண்டு வைத்திருந்தால் அதையும் உன்னிப்பாக கவனிப்பார்கள், பிறகு அக்கம்பக்கத்தில் இருக்கும் காவலாளிகள்மற்றும் அங்கு கடை வைத்து பிழைப்பு நடத்தும் சிறு வியாபாரிகளுக்கு டி வாங்கிக்கொடுத்து அவர்களிடம் இவர்கள் கொள்ளை அடிக்கும் வீட்டில் இருப்பவர்கள் விபரத்தை அறிந்து கொள்வார்கள், குறிப்பாக முதியவர்கள் அல்லது வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இவர்கள் காட்டில் மழை, இது வேண்டும் நடக்கவில்லை என் வீட்டில் நடந்தது ஆகவே சத்தியமாக உள்ளது உள்ளபடி கூறுகிறேன், என் பெற்றோர்கள் தனியாக இருந்தார்கள், என் தந்தை அலுவல் காரணமாக வெளியே சென்றுவிட்டு திரும்ப வருவதற்குள் நடந்த சம்பவம், மின்சாரத்துறையில் இருந்து இருவர் வந்து வீட்டின் காலிங் பெல்லை அழுத்த என் தாய் கதவைத் திறக்க வந்தவர்கள் அம்மா நாங்கள் மின்சாரத்துறையில் இருந்து வந்திருக்கிறோம் பக்கத்துக்கு வீட்டில் மின்சாரம் பாய்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் ஆகவே அக்கம்பக்கம் வீடுகளில் சோதனை செய்ய அதிகாரிகள் அனுப்பியிருக்கிறார்கள் என்று கூறி என் தாயிடம் எந்த எந்த தண்ணீர் பம்ப்புகள் எங்கெல்லாம் வைத்திருக்கிறீர்கள் என்று காட்டுங்கள் என்று கூற அவரும் காட்டிக்கொண்டே வந்திருக்கிறார் . முடிவில் வந்தவனின் ஒருவன் ஒரு பல்புடன் கூடிய ஒயரை என் தாயிடம் கொடுத்து நாங்கள் ஒவ்வொரு மோட்டராக சரிபார்க்கிறோம் நீங்கள் இந்த விளக்கு அலைந்தான் எங்களிடம் கூறுங்கள் என்று வீட்டினுள் இருக்கும் மோட்டரை சோதனை செய்வதாகக் கூறி உள்ளே சென்றிருக்கிறார்கள் . என் தாய் அவர்கள் கொடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறார். சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த அந்த போலி நபர்கள் அம்மா எல்லாமே சரியாக இருக்கிறது, நீங்கள் பயமில்லாமல் மின்சாரத்தை இயக்கலாம் என்று கூறி சென்றுவிட்டனர், எப்போதும் போல் என்னுடைய தந்தை வீடுவந்து தான் கொண்டுவந்த பணத்தை பிராவில் வைக்க சாவியை தேடியிருக்கிறார் காணோம், பாதிரியபடி என் தாயிடம் கூற அவர் நடந்ததை சொல்லியவுடன், என் தந்தை என் தாய்க்கு கூறிய வார்த்தை " வந்தவர்கள் திருடர்கள் , நல்ல வேலை உன்னை கொலை செய்யாமல் பணத்தோடு போனார்கள் பணம் போனால் பரவாயில்லை என்று கூறி சமாதானப்படுத்தினார் " இவர் வீடு கட்டுவதற்காக பங்க்கில் இருந்து பணத்தை எடுத்துவந்து பிராவில் உள்ள வைப்பதையும் சாவி வைப்பதையும் அந்த கட்டிட வேலை செய்யும் உருவத்தில் வந்த திருடன் நோட்டமிட்டிருக்கிறான் என்று நான் எனது தந்தையிடம் கூறினேன், அவர் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை, அவர் சொன்னது போன ஜென்மத்தில் நான் அவனுக்கு என்ன தப்பு செய்தோனே அல்லது அவனுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறேன் இந்த ப்ரியாவியில் அதை அவனே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் என்று கூறிவிட்டார் என் தந்தை ஒரு தனி பிறவி, அவரது இரு சக்கர வாகனம் திருட்டு போனது அதற்க்கு அவர் கூறியது இத்தனை நாட்கள் என்னிடம் இருக்கவேண்டும் என்று இருந்தது என்று கூறி சர்வசாதாரணாமாக செல்பவர், இந்த திருட்டு பற்றிய புகாரை நான் எழுதி காவல் நிலையத்தில் கொடுத்தேன் அதில் தெள்ளத்தெளிவாக கட்டிட வேலை செய்பவர்களே முழு காரணம் என்றும் கொடுத்திருந்தேன் , அவர்கள் எப்போதும் போல் அப்படி என்றால் அவன் யார் என்று அடையாளம் காட்டும்படி கூறினார்கள் , எல்லாவற்றிக்கும் ஆட்கள் இருந்தால் வெற்றி நிச்சயம், பல ஆண்டுகள் கழிந்தன என் தந்தையை பேட்டி எடுக்க வருவதாக சாநிர்மோகன் என்ற பெயரில் ஒருவர் வீட்டுக்கு வந்து தன்னுடைய புகைப்பட ஐடியைக் காட்டி தேதி குறித்துக்கொண்டு அன்று நேரில் வந்து , உங்களைப்பார்த்தால் அந்த கடவுளை நேரில் காண்பது போல் இருக்கிறது என்று கூறி , குளித்துவிட்டு புதிய உடை அணிந்துபு நகை அணிந்து வாருங்கள் என்று கூற இருவரும் தனியார் டிவி சன்னிலில் அதுவும் மிகப்பெரிய கம்பெனி என்பதால் அவரது பேச்சில் மயங்கி அவரது பாட்டுக்கு ஆட ஆரம்பிக்க அவனுக்கு சிற்றுண்டி கொடுத்து டி கொடுத்து உபசாரம் செய்த பின்பு அவனும் நன்றி கூறி ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறேன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியாமல் இருவரும் இருந்திருக்கிறார்கள் . சிறிது நேரம் கழித்து நினைவு வந்ததும் அவர்கள் விழித்து பார்க்க என் தந்தையின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி எடுத்து சென்றிருக்கிறான், நல்ல வேலை தாய் தப்பித்தாள் . புகார் கொடுத்தோம் இதுவரை யாருமே வரவே இல்லை, இதுவும் நடந்து முப்பது ஆண்டுகள் இருக்கும், பிறகு என் தந்தையுடன் நாடகத்தில் நடித்த பிரபபல டிவி நடிகை அம்மா வேடங்களில் பாட்டியாகவும் நடிப்பர் அவரது வீட்டிற்கும் சென்று இதே பெயரில் கைவரிசை காட்டியிருக்கிறேன், ஆக நாம் இது போன்ற செயல்பாடுகளில் இருந்து தப்பபிக்க ஒரே வழி வீடு ஜன்னல்களை மூடி வருகிடுக்கவேண்டும், மெதுவாகப்பேசவேண்டும், வெளியூர் செல்வதாக இருந்தால் போனில் பேசும்போது மிகவும் மெல்லிய குரலில் அடுத்தவர்கள் காதுகளுக்கு கேட்க்காதப்படி பேசவேண்டும், அதே போன்று இரயில் நிலையம் அல்லது விமான நிலையத்துக்கு செல்லும்போது கூடுமானவரை கைபேசியில் குடும்ப நிலவரம் மற்றும் பயண விபரங்களை பேசுவதை தவிர்க்கவேண்டும் . இதற்க்கு மேல் விளக்கமாக கூறினால் திருடர்கள் நம் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள், நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு புத்தகம் போடும் அளவுக்கு திருடர்களை நான் பிடித்து கொடுத்தது, அவர்கள் என்னை மிரட்டியது என்று ஒன்றல்ல இரண்டல்ல பல இருக்கிறன்றன .அனைத்தும் உண்மை . வந்தே மாதரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்