தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், தன்னுடைய 'ஐ - பேக்' என்ற நிறுவனம் வாயிலாக, பல்வேறு கட்சிகளுக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்து, அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர செய்ய தன்னிடம் திட்டங்கள் இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்த அவர், அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளவும் விருப்பம் தெரிவித்தார்.
இதற்காக, காங்., தலைமையுடன் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தார். தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறியது.
மறுப்பு
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பிரசாந்த் கிஷோருடனான நீண்ட ஆலோசனைக்கு பிறகு, அதிகாரம்மிக்க குழு ஒன்றை அமைத்த காங்கிரஸ் தலைவர் சோனியா, அக்குழுவின் ஒரு பகுதியாக கட்சியில் சேர அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தலைமை தேவை
இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட அறிக்கையில், கட்சியில் இணைய வேண்டும் என்ற காங்கிரசின் மிகச்சிறந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். எனது தாழ்மையான கருத்துப்படி, கட்சிக்கு என்னை விட, சீர்திருத்தங்கள் மூலம் ஆழமாக வேரூன்றியுள்ள உள்கட்டமைப்பு பிரச்னைகளை தீர்க்கும் தலைமை மற்றும் ஒட்டுமொத்தமான பொறுப்பு தேவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தன்னிச்சையாக செயல்பட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பட்ஜெட் பணத்தை தன் கிளை நிறுவனங்களுக்கு திருப்பி விட்டு ஆயிரம் கோடியாவது கொள்ளை அடிக்க திட்டமிட்டான். இவன் சிறிய முதலை ஆனால் காங்கிரஸ் ஒரு அனகோண்டா. இந்தியா முழுதும் வேலை செய்ய காங்கிரஸ்ஸிடம் மொத்தமாக பணம் வாங்கிவிட்டு பாதி மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக மாநில கட்சிகளுக்கு வேலை பார்ப்பேன் என்றால் என்ன நியாயம்.இந்திரா, நரசிம்மராவ் மாதிரி தலைமையிருந்தால் பி கே வை அருகில் கூட அனுமதித்து இருக்கமாட்டார்கள்.