Load Image
Advertisement

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேச்சு

Tamil News
ADVERTISEMENT

சென்னை: தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். மொழிக்காக முதலில் வருபவர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நிர்வாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது: தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். தமிழர்களின் மொழி அடையாளம் பெருமை மிக்கது. மொழிக்காக முதலில் வருவார்கள்.


சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுததும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் நீதித்துறை கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது அவசியம். மக்களின் தேவையை நீதித்துறை பூர்த்தி செய்யும்.

Latest Tamil News
உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஒருவர் நீதிபதியாக மொழி, இனம், மதம் ஆகியவை தடையாக இருக்கக்கூடாது. வழக்கு விசாரணை என்பது வழக்காடிகள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.


சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது குறித்து சகநீதிபதிகளுடன் ஆலோசனை செய்யப்படும். கலந்து ஆலோசித்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரமணா பேசினார்.

திருக்குறள்



ரமணா பேசும் போது,

'ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.



வாசகர் கருத்து (47)

  • S Bala - London,யுனைடெட் கிங்டம்

    இந்தியாவின் உதவாக்கரை நீதிபதிகளில் இவர் ஒருவர். அனைத்து நீதிமன்றங்களும் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் இரண்டு ஷிஃப்ட் முறையில் வேலை செய்ய, நீதிமன்றங்கள் வாரம் ஒரு நாள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் (மானில விடுமுறை பத்து நாட்கள் தவிர) வேலை செய்யவும், கீழமை நீதிமன்றங்கள் ஆறு மாதங்களிலும் முறையீட்டு நீதிமன்றங்கள் மூன்று மாதங்களிலும் தீர்ப்பளிக்கவும் என்ன செய்தார் இவர்?

  • Tamilan - NA,இந்தியா

    மொழிவாரி மாநிலம் கொடுத்தது நாட்டையும் பிராந்தியதையும் மொழி அடிப்படையில் கூறு போட்டு விற்கவோ சூறையாடவோ அல்ல என்பதை கோடிட்டு காட்ட மறந்துவிட்டார் .

  • Mohan - Thanjavur ,இந்தியா

    கைய தட்டிக்கிட்டு முன்னாடி நிக்கிறத பார்த்து தப்புக்கணக்கு போட்டுட்டீங்க மை லாடு. அவரு எதைப் பார்த்து என்னா கணக்கு போடுறாருன்னு எங்களுக்குத் தானே தெரியும்.

  • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    தமிழை வைத்து பிழைக்கிறவன் தெலுங்குதேச திராவிடன்கள்

  • Girija - Chennai,இந்தியா

    அட இந்து கடவுள் படத்தை பொதுவெளியில் ரசித்து பாத்ததே அதிசயம் அதில் கை வேறு தட்டுகிறார் . அதிசயமே அசந்து போகும் அதிசயம் . வீட்டிலே ராமானுஜம் வெளியே ராமசாமி சாயம் வெளுத்துவிட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்