Load Image
dinamalar telegram
Advertisement

திமுக அரசின் தவறான முடிவுகளால் மின்வெட்டு: பழனிசாமி தாக்கு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தி.மு.க., அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொடர் முன்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். தமிழகத்திற்கு 17,100 மெ.வா., வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 13,100 மெ.வா., மின்உற்பத்தியாகிறது. இதற்கு, தமிழக அரசு, மின்வாரியம் தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்யாததாலும், மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி கிடைக்காத காரணத்தினால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் தவறான முடிவுகள் தான் காரணம். கோடை காலம் வரும் போது மின்சாரம் தேவை அதிகரிக்கும். இந்த முன்யோசனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
Latest Tamil Newsஅதிமுக ஆட்சி காலத்தில் போதிய அளவு மின்சாரம் இருப்பு வைத்திருந்தோம். கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கினோம். கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருந்தது. கடந்த 2006 -11 திமுக ஆட்சியில் மின்வெட்டு நிலவியது. திறமையில்லாத ஆட்சியால் முறையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. தடையில்லா மின்சாரம் வழங்கினால், தொழிற்சாலைகள் இயங்கி வேலைவாய்ப்பு அதிகரிக்கும். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மின்வெட்டு ஏற்படுகிறது. கடநத காலத்திலும் ஏற்பட்டது. இன்றைய காலத்திலும் ஏற்படுகிறது.

ஜெயலலிதா முயற்சியினால், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், புதிய தொழிற்சாலைகள் வந்தன. தற்போது, அரசு சரியான முறையில் செயல்படவில்லை. அனல் மின் நிலையங்கள் முழுமையாக செயல்படாமல் மக்கள் அவதியடைகின்றனர். தொழிற்சாலைகள் இயங்கவில்லை. மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தூங்க முடியவில்லை. நிர்வாகம் சரியில்லாத அரசால் மின்வெட்டு ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். தடையில்லா மின்சாரத்தை வழங்காத காரணத்தினால் வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (33)

  • Sai - Paris,பிரான்ஸ்

    எடப்பாடிக்கு வட மாநிலங்கள் எல்லாமே மின்வெட்டில் பாதிக்கப் பட்டுள்ள கதையும் குஜராத்துல தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் மூடுவிழாவாம் என்பதும் தெரியாதோ? எடப்பாடி எந்த TV யம் பார்க்க மாட்டாரோ? அல்லது தமிழக மக்களை அத்தனை மடையர்களாக நினைக்கிறாரோ?

  • sankar - Nellai,இந்தியா

    அணில்கள் தொல்லை தாறுமாறு சார் - என்ன செய்வது - விரட்டுவதற்கு ஒரு குழு அமைக்க இருக்கிறோம்

  • தமிழன் - madurai,இந்தியா

    அன்றய மின்வெட்டு துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு டப்பு குடுக்க நினைக்கிறார் இன்றய மின்வெட்டு துறை அமைச்சர்?

  • Mayavan Mayavan - Chennai,இந்தியா

    நாங்க எந்த முடிவும் எடுக்காத பொழுது எப்படி தவறான முடிவு என்று கூறுவீர்கள். வழக்கு போடுவோம். அபாண்டமாய் பழி போடாதீர்கள்.

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    💯, அணில்லாம் ஆடம்ஸ் ப்ரிட்ஜ் பக்கத்துல, அனுமார் செலெ வெய்க்க ராமேசொரத்துக்கு போய்ருக்குங்க

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்