ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் இனி ஆண்டுக்கு 4 கிராமசபைக் கூட்டங்களுக்கு பதிலாக 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், சட்டசபை விதி எண் 110ன் கீழ் பேசியதாவது: திமுக ஆட்சியமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும். கடைசியாக 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி நாள் கொண்டாடப்பட்டது. உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். கிராமங்களை வலிமைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய அதிகாரம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் இனி ஆண்டுக்கு 4 கிராமசபைக் கூட்டங்களுக்கு பதிலாக 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஜனவரி 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22 (தண்ணீர் தினம்), நவம்பர் 1ம் தேதி என ஆண்டுதோறும் 6 நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். உள்ளாட்சி என்பது மக்களாட்சியின் ஆணிவேர். ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான அமர்வுப் படித்தொகை 5 மடங்கு உயர்த்தப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும். சிறந்த கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் உத்தமர் காந்தி விருது தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (30)
முதலில் தலை நகரில் இருக்கும் சாலைகளை சீர்ப்படுத்தி, விளக்குகள் அமைத்து, கழிவுநீர் வடிகால் அமைத்துக்கொடுங்கள். கிராமங்கள் எல்லாம் பிரதமரின் திட்டங்களால் ஒளிர்ந்துகொண்டு தான் இருக்கின்றது.
கூட்டம் நடத்தி என்ன பிரயோசனம் - வடையும் டீயும் சாப்பிட்டுபோகவா - வேலை நடக்கணும் சார் - வெறுமனே "நூறுநாள்" சோம்பேறிகளை உருவாக்காதீர்கள்
Waste of everything by this government. Nothing happening to the satisfaction of public.
ஏமாறுவதற்கு மக்கள் இருந்தால், ஏமாற்றவும் மக்கள் இருப்பார்கள். தெரிந்ததுதானே ஒட்டு போட்டாய் தமிழனே
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
நான் ஒரு அறிவிலி உளறுவதில் மட்டுமே வல்லவன் காரியம் எதுவும் என் மூலமாக ஆகவே ஆகாது இப்போது இருக்கும் ரூ 7.1 லட்சம் கோடியை இன்னும் பெருக்கி ரூ 12 லட்சம் கோடி ஆக்குவதே எனது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன ஸ்டாலின் சரி தானே