Load Image
dinamalar telegram
Advertisement

சாலை போட சொன்னவரை ‛சப் என அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

Tamil News
ADVERTISEMENT
பெங்களூரு: தனது கிராமத்தில் சாலையை சீர்செய்யுமாறு கோரிக்கை விடுத்த இளைஞரை காங்கிரஸ் எம்எல்ஏ அறைந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடாகா மாநிலம் பவகடா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் வெங்கடரமணப்பா. இவர் அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று(ஏப்.,21) பங்கேற்றார். நிகழ்ச்சி முடித்து தனது காரில் ஏறுவதற்காக சென்ற வெங்கடரமணப்பாவை ஒரு இளைஞர் வழிமறித்து தனது கிராமத்தின் சார்பாக கோரிக்கையை முன்வைத்தார். தனது கிராமத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் எம்எல்ஏ.,விடம் கோரினார். இதில் கோபமடைந்த எம்எல்ஏ, இளைஞரின் கன்னத்தில் அறைந்தார். உடனே அவரது ஆதரவாளர்கள் இளைஞரை அப்புறப்படுத்த முயன்றனர்.
Latest Tamil Newsஅப்போது அந்த இளைஞர், ‛நீங்கள்தானே எங்கள் தொகுதி எம்எல்ஏ. உங்களிடம் பிரச்னையை கூறாமல் வேறு யாரிடம் கூறுவது? குறைகளை தெரிவித்தால் அடிப்பீர்களா?' எனக் கேள்வியெழுப்பினார். இதனைத் தொடர்ந்து, அவரை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக பா.ஜ., கட்சி, ‛தொகுதி பிரச்னையை கூறிய இளைஞரை காங்கிரஸ் எம்எல்ஏ கன்னத்தில் அறைகிறார். மக்கள் பிரச்னைகளை காங்கிரசார் அணுகும் விதம் இப்படிதான் இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (13)

  • வீரா -

    இதுவே பிஜேபி எம் எல் எ யாரவது அறைந்திருந்தால் பப்பு பப்பி மீடியாவில் பேசி தாய் சோனியாவிடம் வெரி குட் என்ற பாராட்டை வாங்கியிருப்பார்கள். ஸ்மருதிராணி விமானத்தில் இடைமறித்து பெட்ரோல் விலை பற்றி கேள்வி கேட்ட காங்கிரஸ் பெண்மணிக்கு ஒரு அறை கொடுத்திருக்கலாம்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அரசியல்வாதிகள் என்றாலே ரௌடிகள்தான் போலிருக்கிறது.

  • பேசும் தமிழன் -

    அதுதானே... அவர்கள் இத்தாலி மாஃபியா கும்பலுக்கு மட்டும் தான் சேவகம் செய்வார்கள்... மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எப்படி கேட்கலாம்???

  • jay - toronto,கனடா

    ஓட்டுக்கு பணம் வாங்கினீர்கள் அடி வாங்குவதற்கு மட்டும் தப்பா

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அதிமுக ஆட்சி சாலைகள் போடாமல் போட்டதாக கணக்குக்காட்டினார்கள்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்