Load Image
dinamalar telegram
Advertisement

குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்: மதியம் சொன்னதற்கு மாலையில் மன்னிப்பு கேட்ட பாக்யராஜ்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நடிகர் பாக்யராஜ் விமர்சித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மாலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்ற வார்த்தை யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் ‛பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புத்தகத்தை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். பின்னர் பாக்யராஜ் பேசியதாவது:
தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது சரியான ஒன்று. தகுதியுள்ளவரை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். எங்கு வெளிநாடு சென்றாலும் பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார். எத்தனை பேருக்கு இந்த வயதில் துடிப்புடன் இருப்பார்கள் என்பது சந்தேகம். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை.
Latest Tamil Newsபிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாத குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இத்தகையவர்களை போன்றவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டார்கள், பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு தான் வாய், காது இருக்காது. எனவே, அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மன்னிப்பு கோரினார்இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. குறைபிரசவத்தில் பிறந்தவர்களின் வலி தெரியுமா என கேள்விகள் எழுந்தன.

இதனையடுத்து மாலையில் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோவில் பாக்யராஜ் கூறியுள்ளதாவது: குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்ற வார்த்தை, தப்பான ஒரு அர்த்தத்தை உண்டு பண்ணியது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கூறிய வார்த்தை யாரையாவது புண்படு்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மாற்று திறனாளிகள் குறித்து எப்போதும் உயர்ந்த மரியாதை உள்ளது. நான் பாஜ.,வின் அனுதாபி அல்ல. திராவிட இயக்க தலைவர்களின் கருத்துகளை கேட்டு வளர்ந்தவன்.இனியும் திராவிட இயக்க கருத்துகளுடன் தனது பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலைLatest Tamil Newsமுன்னதாக, இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கவர்னரின் பாதுகாப்பு குறித்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. அதேபோல், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினின் கருத்தை ஏற்க முடியாது. திரைத்துறையினரை திமுக.,வினர் நசுக்கி கொண்டிருக்கின்றனர். நடிகர் பாக்யராஜ் பா.ஜ.,வுக்கு ஆதரவு என்பதைவிட, பிரதருக்கு ஆதரவு என பார்க்க வேண்டும்.

இளையராஜா அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடி குறித்து ஒப்பிட்டு பேசியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. அவரது கருத்தை எதிர்த்து அம்பேத்கரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் கிளம்பி வந்துவிட்டனர். இளையராஜாவின் கருத்தை எதிர்ப்பவர்கள், அம்பேத்கர் சொன்னதையும், மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க வேண்டும். இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது கருப்பு கொடி காட்டியது யார்? காங்கிரசை திமுக.,விடம் ஒட்டுமொத்தமாக அடகு வைத்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (197)

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  அண்ணாமலையை மனதில் வைத்து சொல்லி இருந்திருப்பார்... சங்கிகளுக்கு அது இன்னும் விளங்கவில்லை...

 • H அண்ணாமலை ராஜா - Theni,இந்தியா

  வாசகர்களுடைய கருத்துக்கள் இங்கே வீணாக வக்கிரவம்பா மாறி ஒற்றுமையான மக்களில் உள்ளத்தில் விஷத்தை கலந்து வேற்றுமை ஏற்பட்டு ஜாதி என்கிற பாகுபாட்டில் நாடு நாசம் ஆக கூடிய தருவாயில் நம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் அரசியல் ஆதாயங்களுக்காக வெறுப்புணர்வுடன் மக்களே மக்களே நன்றாக சிந்தியுங்கள் இந்திய நாடு இங்கு வாழும் அனைத்து சமுதாயத்திற்கும் உரிமையான பொதுவான நாடு எல்லாம் வளமும் சிறப்பும் செல்வ நாடு ஜாதி ஜாதி ஜாதி என்று பாகுபாடு காட்டி ஒற்றுமையாக இருக்கும் இந்து முஸ்லீம் கிறிஸ்துவம் சீக்கியன் மற்றும் பல, மக்களை நாட்டை இந்திய பொருளாதாரத்தை வீணாகிவிடாதீர்கள் நாம் இந்தியன் என்று பெருமை கொள்வோம் அனைத்து ஜாதி சகோதர பாசத்துடன் ஜாதி மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைவோம் அவர்களுடைய மதம் அவரவர்களுக்கே ஒருவரை ஒருவர் தீண்டவேண்டாம் சிறப்புடன் ஒற்றுமையுடன் வாழ்வோம் பல்லாண்டு என்றென்றும் .தவிர்ப்போம் வாக்குவாதம் .தவிர்ப்போம் வாக்குவாதம் தவிர்ப்போம். வாக்குவாதம் .உருவாக்கு சகோதரத்துவம் உருவாக்கு சகோதரத்துவம் உருவாக்கு சகோதரத்துவம் உரிமையுடன் உண்மையாக வாழ்வோம் நாம் நல்ல மனிதர்களாக தொப்புள்குடி உறவுகளாக

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

  ...ஒரு குடும்பஸ்தனாக பயந்துவிட்டார் ..அவ்வளவுதான் ....

 • Rocky - Doha,கத்தார்

  பாக்யராஜ் சார் நீங்கள் கூறியது உண்மைதான் அற்ப பதர்களிடமும், அடிவருடிகளிடமும், அல்லக்கைகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.

 • sankar - Nellai,இந்தியா

  "எங்கு வெளிநாடு சென்றாலும் பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார். எத்தனை பேருக்கு இந்த வயதில் துடிப்புடன் இருப்பார்கள் என்பது சந்தேகம். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர்"- இந்த கருத்தை அவர் மாற்றவில்லை - சகவாஸ தோஷநிவர்த்திக்காக வருத்தம் தெரிவித்து இருக்கலாம்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்