இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், 'சமூக நீதி விஷயத்தில், மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை கண்டு, அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' என, கூறியிருந்தார். இளையராஜாவின் இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் வரவேற்பும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‛என்னை விட கறுப்பு தமிழன், கறுப்பு திராவிடன் யார் இருக்கிறார்? யுவன்சங்கர் ராஜாவை விட கறுப்பு தமிழன் நான்; கறுப்பு திராவிடன் நான்' எனக் கூறினார்.

இது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து. தம்பி யுவன், திராவிடனாக இருக்க வேண்டும், இல்லையெனில் தமிழனாக இருக்க வேண்டும். யுவன் சின்ன பிள்ளை என்பதால் குழம்பி போயுள்ளார். கறுப்பாக இருப்பதால் தான் திராவிடன் என அண்ணாமலை கூறுகிறார். எருமை மாடு கூடதான் கறுப்பாக இருக்கிறது. அதற்காக அதை திராவிடன் எனக் கூற முடியுமா?. இவ்வாறு அவர் கூறினார்.
இதெல்லாம் போற போக்குல சிரிச்சுட்டு போயிரணும், இதைப் பற்றி ரொம்ப யோசிக்கக்கூடாது. அப்புறம் நமக்கும் இவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.