Load Image
dinamalar telegram
Advertisement

கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை திமுக புறக்கணித்திருந்தது. இதற்கான காரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் விளக்கமளித்துள்ளார்.

தேநீர் விருந்தை புறக்கணித்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின்கீழ் விளக்கமளித்தார். ஸ்டாலின் பேசியதாவது: நீட் விலக்கு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் மாளிகையில் கடந்த 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது. இந்த நேரத்தில், கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துக்கொள்வது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சட்டசபை மாண்பினை மேலும் சிதைப்பதாகவும் அமையும். எனவே, அந்த விருந்தில் கலந்துக்கொள்ளவில்லை. இது குறித்து கவர்னருக்கு கடிதம் எழுதினேன்.

கவர்னருடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை, எனக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இருக்கிறது. மேடை பேச்சுகளில் இந்த அரசை பல முறை கவர்னர் பாராட்டி பேசியுள்ளார். அவர் பழகுவதற்கு இனிமையானவர். கவர்னருக்கு உண்டான மரியாதையை நாங்களும் தொடர்ந்து அளிப்போம். தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்கும் பாராட்டுகளை விட, தமிழகத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதே முக்கியமானது. சட்டசபை மாண்பையும், தமிழர்களின் உணர்வுகளையும் மதித்து நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.
Latest Tamil Newsதமிழக முதல்வராக சட்டசபையின் மாண்பை காப்பதே என் பொறுப்பு. இதனால் தான் தேநீர் விருந்தை புறக்கணித்தோம். கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி இன்றுடன் 70 நாட்கள் ஆகியுள்ளது. தற்போது அம்மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க கவர்னர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. அது தொடர்பான நடவடிக்கைகளை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (60)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  தீ மு கா ஒரு தில்லு முல்லு கட்சியென்று இபோலாது நான்றாக நிரூபணமாகிறது. அவர்களிடம் கொட்டி கிடைக்கும் போனதாய் வைத்து தேர்தலுக்கு முன்னால் பல நிழல் போரளிகள் பணம் கொடுத்து உருவாக்கி போதையுரைக்களிய தகுந்த ப்ரூப நிரூபணம் இல்லாமல் அவர்கள் கட்சி பத்திரக்கிய கல் வெளியிட்ட செய்திகலை நீதி மன்றங்களில் உதாரணம் காட்டி நீதி பதிகளிடம் வாங்கி கட்டி கொண்டு கொண்டு வந்தார்கள். தீ மு க்க மக்கல்லை ஏமாற்றி அவர்களய் நிரூபணம் செய்துள்ளார்கள்.

 • Ramesh M - COIMBATORE,இந்தியா

  . இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.என கூறி நீட் தேர்விற்க்காக தேனீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை. இலங்கையில் ராஜபக்சே நடத்திய விருந்தில் கலந்துகொண்டது தமிழக மக்களின் உணர்வை பாதிக்கும் செயலக தெரியவில்லையா. ரஜினி அவர்கள் லைக்கா மூலம் இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீங்கள் பிறகு ராஜபக்ஷே விருந்தில் கலந்துகொண்டது என்ன என்று சொல்வது.

 • Neutral Umpire - Chennai ,இந்தியா

  ஈயம் பூசின மாதிரியும் தெரியணும் ..பூசாத மாதிரியும் இருக்கணும் ..

 • vbs manian - hyderabad,இந்தியா

  இவர்களின் காழ்ப்புணர்ச்சி அரசியல் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும்.கழக சூழலில் மாட்டி இன்னும் எத்தனை தலைகுனிவு காத்திருக்கிறதோ. சில சமயம் கருணாநிதி பரவாயில்லை என்று சொல்ல தோன்றுகிறது.

 • s t rajan - chennai,இந்தியா

  ஏன் கவர்னர் எழுப்பியுள்ள நியாயமான வினாக்களுக்கு பதில் அளிக்காமல் முரண்டு பிடிக்கிறீர்கள், முதல்வரே ? ஒரு வேளை பதில் தெரியாமல் மிரண்டு போய் இவ்வாறு (கவர்னர் அவர்களை) குறைகூறி தப்பிக்க பார்க்கிறீர்களோ ? கவர்னரும் தமிழக மக்கள் மீது அக்கறை உள்ளவர் தான்.

Advertisement