Load Image
dinamalar telegram
Advertisement

இளையராஜாவை அவமானப்படுத்துவதா?: ஜே.பி.நட்டா கண்டனம்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்த நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‛பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
Latest Tamil Newsஇளையராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பலரும் அவருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதேநேரத்தில் தமிழக பா.ஜ.,வினர் இளையராஜாவின் கருத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவரது கருத்துகளை வாபஸ் பெற வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தினர். ஆனால், தன் கருத்தை திரும்பப் பெற மாட்டார் என இளையராஜா கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.
Latest Tamil Newsஇந்த நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துகளால் தாக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசைமேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள், பார்வைகள் இருக்கும். தங்களுக்கு மட்டுமே ஒத்தூத வேண்டும் என நினைப்பது, வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகமாகும்?. இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (109)

  • நெல்லை ரமணி - திருநெல்வேலி ,இந்தியா

    இளையராஜா " உனக்கு இசையைப்பற்றி என்ன தெரியும் ? " ன்னு நிறைய பேரிடம் ஆணவத்தோடு கேட்டதுண்டு. அவரது இசை திறமைக்ககாக அதையெல்லாம் எல்லோரும் பொறுத்துக் கொண்டதுண்டு. இப்போது அவரிடம் " இசையை தவிர உங்களுக்கு என்ன தெரியுமும்ன்னு" அவரை பார்த்து கேட்கவேண்டியுள்ளது. இசையிலும், ஆணவத்திலும் உச்சம் தொட்ட இளையராஜா நல்ல மனிதனாக வாழ்ந்ததாக தெரியவில்லை.இவரால் வஞ்சம் தீர்க்கப் பட்டவர்கள் ஏராளம்.

  • பேசும் தமிழன் -

    பண்ணைபுரத்து தங்கம் ...உண்மையை உரக்க பேசும் சிங்கம் தமிழன் இல்லை ...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தமிழக முதல்வர் சட்டசபையில் குப்புற விழுந்து கெஞ்சாத குறையாக கவர்னருக்கும் எங்களுக்கும் ஒன்றும் இல்லை என்று 110ல் அறிக்கை விடுகிறார்கள் - ஆனால் இந்த திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமான அடிமைக்கூட்டம் மட்டும் இளையராஜாவை காய்ச்சுகிறது.

  • Tamilan - NA,இந்தியா

    சாதியிஸத்தை தூண்டும் , பிரித்தாளும் பா ஜ க . அதை நூதனமாக மக்களிடம் எடுத்துச்செல்லும் பத்திரிகைகள் .

  • Tamilan - NA,இந்தியா

    இசையமைப்பாளர்களை அரசியலுக்கு தூண்டும், தங்கள் அரசியல் எடுபிடிகளாக பாவிக்கும், அவர்களை வைத்து அரசியல் செய்யும் பா ஜ க . அவர்களுடன் சேர்ந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் கும்பல் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement