Load Image
dinamalar telegram
Advertisement

ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட ஹனுமன் சிலை; பிரதமர்

Tamil News
ADVERTISEMENT
ஆமதாபாத்: குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர பிரம்மாண்ட அடி உயர ஹனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் ராமேஸ்வரம் மற்றும் மேற்கு வங்கத்தில் இதேபோன்று பிரம்மாண்ட ஹனுமன் சிலை நிறுவப்படும் எனக் கூறினார்.

நாட்டின் நான்கு திசைகளிலும் ஹனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் சிலை ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லாவில் கடந்த 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டது. Latest Tamil News


தொடர்ந்து இரண்டாவதாக குஜராத் மாநிலம் மோர்பியில் கேசவானந்த் ஆசிரமத்தில் 108 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் கடந்த 2018 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், சிலையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.Latest Tamil News
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இதேபோன்ற மிகப்பெரிய ஹனுமன் சிலையை ஷிம்லாவில் பார்த்துள்ளோம். தற்போது, இரண்டாவது சிலை மோர்பியில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சிலைகள் ராமேஸ்வரம் மற்றும் மே.வங்கத்தில் நிறுவப்படும். ஹனுமன் சிலையை உருவாக்குவது தீர்மானம் மட்டும் அல்ல. ஒரே பாரதம் சிறந்த பாரதம் என்பதில் ஒரு அங்கமாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (4)

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்

  • S. Narayanan - Chennai,இந்தியா

    ஜெய் சீதாராம் ஜைய் ஹனுமான் இந்த உலக மக்கள் யாவரையும் காப்பாற்ற வேண்டும்.

  • Samathuvan - chennai,இந்தியா

    முதலில் நாட்டு மக்களை பற்றி யோசிங்க ஜீ பின்பு இதுபோல டிஸ்னிலேண்டு பற்றி யோசிக்கலாம்.

  • ராமகிருஷ்ணன் -

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்