Load Image
dinamalar telegram
Advertisement

நரிக்குறவர் வீட்டில் கோழிக் குழம்புடன் இட்லி, வடை சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் நரிக்குறவ மாணவியின் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் கோழிக்குழம்பு, இட்லி, வடை சாப்பிட்டார். அப்போது மாணவிக்கும் இட்லியை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

சென்னை திருமுல்லைவாயில் ஜெயாநகர் நரிக்குறவர் காலனியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, முதியோர் உதவித்தொகை, கடனுதவிகளை வழங்கிய முதல்வர் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயை திறந்து வைத்தார். அங்குள்ள மக்களுடன் உரையாடிய ஸ்டாலின், அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

பின்னர், திவ்யா என்ற மாணவியின் வீட்டிற்கு சென்றார். ஸ்டாலினுக்கு பாசி மாலை அணிவித்தும், பூக்கொடுத்தும் மாணவியின் குடும்பத்தார் வரவேற்றனர். மாணவியின் வீட்டில் இட்லி, வடை, கோழிக்குழம்பு சாப்பிட்டதுடன் தேநீர் அருந்தினார். மேலும், மாணவிக்கு இட்லியை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
Latest Tamil Newsநரிக்குறவர்கள், பழங்குடியினர்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு நாங்களே தேடி வந்து உதவிகளை செய்யக்கூடிய அரசாக நமது அரசு உள்ளது. திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க நமது அரசு தொடர்ந்து உழைக்கும். நரிக்குறவ மாணவியின் வீட்டில் சாப்பிட்டபோது காரமாக இருப்பதாக கூறினேன். காரமாக சாப்பிடுவதால்தான் சளி, இருமல் வருவதில்லை என நரிக்குறவர் இன சமூகத்தினர் கூறினர். நரிக்குறவ மக்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (72)

  • Just imagine - chennai,சீனா

    கமாண்டர்:"காக்கா தூக்கின வடை இங்க இருக்கு,வடையை தூக்கின காக்கா எங்க இருக்கு" ...... உபிக்கள்: "கமாண்டர் ஐயா,காக்கா...அந்த கறிக்குழம்புலத்தான் இருக்கு."

  • periasamy - Doha,கத்தார்

    ஒரு மாநில முதல்வராக இருப்பவர் இதுபோல முன்னுதாரணமாக இருப்பது சாதி மத பேதத்தை நிச்சயம் மாற்றும்

  • David DS - kayathar,இந்தியா

    அவர் போட்டுருக்கறது பாசி மாலை மாதிரி இல்லையே. சின்ன சைஸ் ருத்ராட்ச மாலை மாதிரி இருக்கு.

  • vigneshh - chennai,ஐக்கிய அரபு நாடுகள்

    நரிக்குறவர் வீட்டில சிக்கன் இறைச்சி கிடைக்காது, காக்க இறைச்சி தான் கிடைக்கும்.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    அநேகமா இட்லி, வடை, நாட்டுக்கோழி கறிக்குழம்பு பரிமாறின அவங்க வீடு வாடகை வீடாத்தான் இருக்கும் ..... காரம் அதிகமா சாப்புடுவீங்களா என்று கேட்டதற்குப் பதிலாக "வீட்டு சொந்தக்காரர் வாடகையை கூட்டியிருப்பாரே?" என்று கேட்டிருக்கலாம் .....

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்