Load Image
dinamalar telegram
Advertisement

ஷாங்காய் நகரில் கோவிட் பரவல்: கட்டிப்பிடிக்காதீர்கள்; சீனாவில் எச்சரிக்கை

பீஜிங்-தற்போது உலகம் முழுக்க தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், நம் அண்டை நாடான சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.

Latest Tamil News

மக்கள் நெரிசல் அதிகமுள்ள இந்நகரில் தற்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக சீன சுகாதாரத்துறை அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், 'வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற உங்கள் ஆசையை சிறிது காலம் ஒத்திப்போடுங்கள்' என, உத்தரவிட்டது.


ஷாங்காய் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்களும் சில அறிவிப்புகளை வெளியிட்டனர்.அதில், 'இன்று முதல் வீடுகளில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண வேண்டாம்; அனைவரும் தனித்தனியாக உறங்கவும்; ஒருவருக்கொருவர் கட்டிப் பிடிப்பதையும், முத்தம் கொடுப்பதையும் தவிர்க்கவும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News
ரத்த நாளங்களில் அடைப்புகொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகான பல்வேறு உடல் நலக்குறைவுகள் குறித்து, ஐரோப்பிய நாடான சுவீடனை சேர்ந்த உமியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், லேசான தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு கூட, ஆறு மாத காலத்திற்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது


.குறிப்பாக, தொற்றில் இருந்து மீள்பவர்களுக்கு மூன்று மாத காலம் வரை கால் ரத்த நாளங்களில் அடைப்பும் ஆறு மாத காலம் வரை நுரையீரலில் ரத்த நாள அடைப்பும், இரண்டு மாதங்கள் வரை ரத்த கசிவும் ஏற்பட வாயப்புள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

 • தமிழன் - madurai,இந்தியா

  நிலைமை ரொம்ப மோசமா இருக்கோ? ஒருவேளை இது வேற வகை கிருமியோ? உயிர் கொல்லியா? பிளைட் எல்லாம் கான்செல் செஞ்சுருக்காங்களா? மீண்டும் உலகில் பரவ வாய்ப்புள்ளதா? இன்னும் அதிக தகவல் தெரியப்படுத்தவும்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  முதலில் வைரசுக்கு மருந்து கண்டு பிடிங்கப்பா.தட்டுப்பூசி மருந்து கண்டுபிடிக்க மட்டும் எப்படி முடிந்தது?

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  "துஷ்டரை கண்டால் விலகி நில்லுங்கள்" என்று கேள்வி பட்டிருக்கிறோம். இனி, நம் வீட்டிலேயே, நமது சொந்தங்களிடமிருந்தே விலகி நிற்க வேண்டும் போல் ஆகிவிட்டது நிலைமை.

 • Taas Vyas - ,

  இது எதைக்காட்டுகிறது பல மிருக பறவைகளை வாழவிடாது இரக்கமின்றி கொன்று தின்பதால் அவ்வுயிர்களின் உயிர்துடிப்பால் விளைந்த சாபமே வியாதியாகப் பரவுகிறது- கட்டிப் பிடிக்க அவங்களில்லாத அவற்றை வாழக்கூட விடாத இவர்கள் இனி கட்டிப் பிடிக்கவே முடியாது மனித இனம் அழிந்து ப்ரளயம் ஏற்பட வேண்டும்-"உயிர்களிடத்தன்பு வேண்டும்"-மகாகவி எட்டயபுரம் சின்னச்சாமு சுப்ரமண்ய பாரதி,😪😪😪.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  கடைசி பாரா வயிற்றை கலக்குது

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்