Load Image
dinamalar telegram
Advertisement

தமிழக மீனவருக்கு ஜாமின் வேண்டுமா: தலா ரூ.1 கோடி செலுத்து: இலங்கை நீதிமன்றம் "பகீர்" உத்தரவு

Tamil News
ADVERTISEMENT
கொழும்பு: எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, இலங்கையின் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மீனவர்களுக்கு மே 12ம் தேதி வரை சிறை காவல் விதித்த நீதிமன்றம், ஜாமினில் செல்ல வேண்டுமென்றால் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என தெரிவித்தது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த மார்ச் 24ம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 12 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை ஏப்.,7ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Latest Tamil Newsஇந்நிலையில், இன்றுடன் (ஏப்.,7) சிறைக் காவல் முடிந்து மீண்டுமு் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் வரும் மே 12ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஜாமினில் செல்ல வேண்டுமென்றால் 12 மீனவர்களும் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (20)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    உன் நாட்டு மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். இந்தியாவும், மனிதாபிமான அடிப்படையில், பல கோடி பொருட்களை உங்களுக்கு அனுப்பி உதவி புரிகிறது. இந்தியாவின் உதவியை மறந்து, இந்திய மீனவர்களை விடுவிக்க ஒரு கோடி கேட்கிறாயே. இது நியாயமா? நீ எங்கு நீதி படித்தாய் ....

  • Venugopal S -

    இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வழியா? அநேகமாக பாஜக கொடுத்த ஐடியாவாகத் தான் இருக்கும்.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    கமல், ரஜினி, விஜய் மூவருக்குள்ளும் போட்டி என்று கேள்விப்படுகிறேன். பிசாத்துக்காசு 12 கோடியை எறிந்து தமில் மீனவர்களை ஜாமீன் எடுப்பதில் ஆரோக்கியமான போட்டி. இன மான தலைவர்கல் வால்க.

  • Dees - Chennai,இந்தியா

    யாருக்கு வேண்டும் உங்கள் ஜாமீன், ௧௫ உள்ள வைத்து சோறு போடுங்கள் அதான் கைது பண்ண உங்களுக்கு தண்டனை, உள்ளூர்மக்களே சோத்துக்கு லாட்டரி அடிக்கையில், தமிழக மீனவர்களுக்கு மாமியார்வ வீட்டு விருந்து

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

    திமுக முந்திரிகளின் பினாமி படகுகளில் கள்ளக்கடத்தல் ,போதை கடத்தல் எல்லாம் செய்த டுபாக்கூர் மீனவ கும்பல்தான் தற்போது சிக்கியிருப்பது ...இவர்களுக்கு எவ்வளவு கொடிகள் பிணைத்தொகை விதித்தாலும் , முந்திரிகள்தான் கட்டவேண்டும் ....இந்த மீனவனை அம்போ வென்று விட்டுவிட்டால் , அவன் தாறுமாறாக கூவுவான் ...முந்திரி கதை வெளியேவந்து ஊர் நாறும் ..அதுவும் நல்லதே ...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்