Load Image
dinamalar telegram
Advertisement

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக்கோரியும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
Latest Tamil News
இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வழக்கில் இன்று (ஏப்.,7) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நீதிபதிகள், ‛இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி இச்சட்டம் செல்லத்தக்கது. இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடின்படி மாணவர் சேர்க்கையை தொடரலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஓதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும்.' என உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (14)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    இந்த 7.5 சதவீத இட ஒதுக்கிடு எடப்பாடி ஆட்சியின்போதே கொண்டுவந்து அமலில் உள்ளதே. மாணவர்களும் அதன்படி சேர்ந்து பயின்று வருகின்றனரே. அதை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது இப்போது. அவ்வளவுதான் இதில் திராவிஷா ஆட்சி கொண்டுவந்தது என்று கூற வாய்ப்பே இல்லை இல்லை இல்லை

  • Rengaraj - Madurai,இந்தியா

    இளங்கலை மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு இடஒதுக்கீடு முதுகலை மருத்துவப்படிப்புக்கும் இடஒதுக்கீடு. படித்து முடித்து அரசு மருத்துவர் ஆவதற்கும் இடஒதுக்கீடு அரசு மருத்துவர் ஆனபின்னர் பதவி உயர்வு, பணிமூப்பு இவற்றிலும் இடஒதுக்கீடு. சமூக நீதி என்ற போர்வையில் இடஒதுக்கீடு என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை இருக்கவேண்டும் என்று அணைத்து தரப்பு மக்களும் அரசை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறார்களா என்ன ??

  • GMM - KA,இந்தியா

    5 ஆண்டுக்கு பின் மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை கால நிர்ணயம் இல்லாமல் தான் பல சட்டங்கள். ஒதுக்கீடு சலுகையை வாபஸ் பெறுவது கடினம். அரசியல் சட்டம் மாறும் வரை இட ஒதுக்கீடு, இலவசம் பயணிக்கும். மருத்துவ கல்வி தேசிய அளவிலா? மாநில அளவிலா? 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர் கள் இட ஒதுக்கீடு இந்தியா முழுவதும் செல்லுமா? இட ஒதுக்கீடு, இலவசம் அரசியல் சட்டம் அனுமதித்தாலும் இது ஒரு வாக்கு வங்கி மசோதா என்று அனைவரும் அறிவர். மாணவன் திறன் பெற்றோர், ஆசிரியர், அரசு கல்வி முறை, தன் ஆர்வம் சார்ந்தது. பிற சமூகம் இன்றைய கால கட்டத்தில் காரணம் அல்ல. அலோபதி மருத்துவம் ஒரு கடினமான தொழில். 5 ஆண்டுக்கு ஒருமுறை நீட் போன்ற பொது தேர்வு அவசியம். தேர்ச்சி பெறாதவர்கள் காச்சல், சளி, தலைவலி, இருமல் போன்ற சிறிய நோய்ககுக்கு மட்டும் மருத்துவம் பார்க்க வேண்டும். அரசு ஊழியர்கள், திராவிட அரசியல்வாதிகள் கட்டாயம் இவர்களிடம் மருத்துவம் பார்க்க வேண்டும். அல்லது அரசு மருத்துவமனையில் பார்க்க வேண்டும். மத்திய அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

  • r ravichandran - chennai,இந்தியா

    அதிமுக பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் சொந்தம் கொண்டாடுகிறார்

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இட ஒதுக்கீட்டுக்கு அளவே இல்லையா? தனியார் பள்ளி மாணவர்கள் பாவம் செய்தவர்களா?

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்