தி.மு.க., மண்டல தலைவர்கள் சுபமுகூர்த்த நாளில் பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சி மண்டல தலைவர்கள் தேர்தல், கடந்த மார்ச், 30ல் நடந்தது. மாமன்றத்தில். 75 தி.மு.க., கவுன்சிலர்கள் இருப்பதால், ஐந்து மண்டலங்களுக்கும் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.அவர்கள், சுப முகூர்த்த தினமான நேற்று, நல்ல நேரமான காலை, 9:00 முதல், 10:30க்குள். கிழக்கு மண்டல அலுவலகத்தில் லக்குமி இளஞ்செல்வி, மத்திய மண்டலத்தில் மீனா, மேற்கு மண்டலத்தில் தெய்வானை, தெற்கு மண்டலத்தில் தனலட்சுமி ஆகியோர் பொறுப்பேற்றனர்.
மண்டல தலைவர்களுக்கு மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பின், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், கவுன்சிலர்கள், தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் காத்திருந்து பொன்னாடை அணிவித்து, எலுமிச்சம் பழம் கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர். கட்சியினர், 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.

குடிநீருக்கு முக்கியத்துவம்
மத்திய மண்டல தலைவர் மீனா கூறுகையில், ''தற்போது, 5, 10, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கோடையில் நாட்கள் இடைவெளி அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் பொங்கி, ரோட்டில் ஓடுகிறது. போர்க்கால அடிப்படையில், கால்வாய்களை துார்வார வேண்டும். முக்கிய சாலைகளில் 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும்,'' என்றார்.கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி கூறுகையில், ''குடிநீர், சாக்கடை கால்வாய், ரோடு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். கிழக்கு மண்டலம் சீர்மிகு மண்டலமாக மாற்றப்படும். மக்கள் கொடுத்த மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வாசகர் கருத்து (16)
ஏன் , தி மு க மாளிகை தில்லியில் ' தெலுங்கு வருட பிறப்பு ' அன்று திறக்கப்பட்டது தெலுங்கு பேசும் மக்களுக்கு ' தெலுங்கு வருட பிறப்பு ,யுகாதி ' மிக மிக நல்ல நாள் . அது தெரியுமா .
த்ராவிஷ மத க்ரிப்டோக்கள் அப்படித்தான். கொள்ளையடிப்பதில் தசமபாகம் கோவிலுக்கு என்று நேர்ந்து கொள்வார்கள். தெய்வத்தைப் பங்குதாரர் ஆக்கிவிட்டால் கொள்ளையடிப்பது குற்றமில்லை என்று த்ராவிஷ மதம் கூறுகிறது.
Entire DMK fraternity follows all these beliefs and GOD etc., within their house. But only when they come outside they talk about atheism. All hypocrites. Entire Tamil nadu people knows this.
எப்பேற்ப்பட்ட சுப முகூர்த்தத்தில் பதவெயேற்றாலும் களவாணித்தனம் செய்தாலும் அதன் கர்ம பலனை அனுபவித்தே ஆக வேண்டும். உண்மையான பகுத்தறிவுள்ளவனுக்குத்தான் அது புரியும்...
விடியல் ஐயா சொரியார் மண்ணு பகுத்தறிவு இப்பிடி பல்லிலிக்குது ஹீஹீஹீ