Load Image
Advertisement

உள்ளாட்சி தேர்தல் முடிந்தது; சொத்து வரியும் உயர்ந்தது: பழனிசாமி குற்றச்சாட்டு

 உள்ளாட்சி தேர்தல் முடிந்தது; சொத்து வரியும் உயர்ந்தது: பழனிசாமி குற்றச்சாட்டு
ADVERTISEMENT

சென்னை: உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் சொத்து வரியை உயர்த்தியுள்ளதாகவும், வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.


தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இன்றைய (ஏப்.,6) சட்டசபை கூட்டத்தொடரிலும் அதிமுக, பா.ஜ., கட்சிகள் சொத்து வரியை திரும்ப பெறக்கோரி கோரிக்கை விடுத்தன. இதற்கு முதல்வர் ஸ்டாலின், ‛சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது. மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என வலியுறுத்தினார். முதல்வரின் இந்த விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பா.ஜ., கட்சிகள் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பியதுடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Latest Tamil News
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினோம். கொரோனா பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது பெரும் சுமையை அரசு சுமத்தியுள்ளது. உடனடியாக சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால், உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் சொத்துவரியை உயர்த்தியுள்ளனர். வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (23)

  • Ram - Dindigul,இந்தியா

    அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்து அதிமுக வையும் காலி செய்த அமாவாசை கோஷ்டி தலைவா சூப்பர்

  • Mohan - Thanjavur ,இந்தியா

    இதற்குத்தானே தள்ளிப்போட்டாய்

  • Mohan - Thanjavur ,இந்தியா

    இதற்குதானே தள்ளி தள்ளி போட்டோம்

  • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

    ஆமாம் பழனி நீ உன் சொந்த ஊரில் நடந்த எதிர்ப்பு மீட்டிங்கில் கலந்து கொள்ளாமல் திருச்சி ஓடி வந்ததின் ரகசியம் என்னவோ அங்கே கூட்டம் கூட முடியாது என்று சொல்லிவிட்டார்கலா

  • Visu Iyer - chennai,இந்தியா

    rob the rich feed the poor என்று தானே சொல்லுவார்கள்.. சொத்து உள்ளவர்களிடம் கூடுதல் வரி பெற்று ஏழை மக்கள் வளர்ச்சிக்கும் வாழ்வாதாரத்திற்கும் உதவு வது தானே நல்ல அரசு.. அதை அதிமுக எதிர்க்கிறது என்றால் அதிமுக இன்னமும் தமிழகத்திற்கு வேண்டுமா? சிந்தித்து பாருங்கள்.. அதை ஒரு லெட்டர் பேட் கட்சியுடன் சேர்த்து விட வேண்டாமா.. தமிழக மக்களே சிந்தியுங்கள்.. உங்கள் உரிமை உங்களிடமே இருக்கட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்