Load Image
dinamalar telegram
Advertisement

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் வழக்கு; தினகரன் ஆஜராக சம்மன்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர அமமுக பொதுச் செயலர் தினகரன் லஞ்சம் கொடுத்ததாக பல்வேறு பண மோசடி வழக்குகளில் சிறையில் சிக்கியிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வரும் 8 ம் தேதி தினகரன் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர், 33. இவர், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனிடம், 2017ல், 'இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சமாக தர வேண்டும்' எனக்கூறி, 50 கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளார். தினகரன் அவரிடம் 2 கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரை, இரட்டை இலை சின்னம் பெற, லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் நடந்த பண மோசடி தொடர்பான வழக்கிலும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
Latest Tamil Newsபின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பண மோசடி தொடர்பாக, சுகேஷ் சந்திரசேகரிடம் ஏழு நாள் காவலில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவரிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், ‛தினகரன் முன்பணமாக தமக்கு ரூ.2 கோடி கொடுத்ததாக' சுகேஷ் சந்திரசேகர், அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது. வாக்குமூலத்தின் அடிப்படையில், வரும் 8 ம் தேதி தினகரன் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (8)

  • Visu Iyer - chennai,இந்தியா

    சட்ட வல்லுனர்கள் கருத்து சொன்னால் நல்லது

  • Visu Iyer - chennai,இந்தியா

    தினகரனே.. வருங்கால முதல்வரே வருக.. தமிழகத்தில் நல்லாட்சி தருக...

  • Visu Iyer - chennai,இந்தியா

    குற்றவாளிகள் நிரபராதிகள் ஆனால்........ அப்படி தான் இருக்கும்.

  • Visu Iyer - chennai,இந்தியா

    இது வழக்கம் போல கண் துடைப்பு... இவர்கள் எதுவும் தரவில்லை என்று முடிவு வரும்..

  • Visu Iyer - chennai,இந்தியா

    அஞ்சு வருஷம் கழித்து தான் சம்மனே அனுப்புறாங்க... மோடி ஜி அரசின் நிர்வாக திறமை எந்த லட்சணத்தில் இருக்குன்னு பாருங்க... நிர்வாக திறமை இல்லாதவர்கள் எல்லாம் அரசு உயர் பதவியில் இருந்தால் இப்படி தான் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்... பாஜக இல்லாத பாரதம் அமைப்போம் என்ற ஓர் அணியில் ஒன்று திரளுவோம் என்று ஒரு கூட்டம் சுத்திகிட்டு இருக்கு

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்