சொத்துவரி உயர்வு... தி.மு.க., அரசின் பரிசு: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
மதுரை: ''வாக்களித்த மக்களுக்கு தி.மு.க., அரசு கொடுக்கும் பரிசு சொத்து வரி உயர்வு,'' என, மதுரையில் அ.தி.முக., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம்சாட்டினார். அவர் கூறியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக், குடிநீர் திட்டம், இலவச லேப்டாப் திட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2018 அ.தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டதற்கு எதிர் கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இது வரி உயர்வா, சொத்து அபகரிப்பா' என்றார். அன்று ஊரக, நகர்ப்புற தேர்தல் நடத்திய போது நிர்வாக வசதிக்காக வரி விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஊரக, நகர்ப்புற தேர்தல்கள் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்வான நிலையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதை அரசு திரும்ப பெற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் விலைவாசி ஏறி விட்டது. பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 குறைப்பதாக கண்துடைப்பிற்காக கூறுகிறார்கள்.
பத்தாண்டுகளாக அ.தி.மு.க., ராம ராஜ்ஜியம் நடத்தி மக்களை நன்றாக வைத்திருந்தது. தி.மு.க., ஆட்சியால் தமிழகம் கலியுகமாக மாறிவிட்டது என்றார்.
வாசகர் கருத்து (10)
......
அதிமுக ஆட்சி ராமராஜ்யமா ?அவங்க(பாஜக) கூட சேராதேன்னு அப்பவே சொன்னேன் கேட்டியா? இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் ?எல்லாம் தலையெழுத்து.
இதே மத்திய நிதிக்குழு சொல்லியும் பத்து வருடமாக சொத்து வரியை உயர்த்தாமல் ஆச்சி செய்த செல்வி ஜெயலலிதா மற்றும் உண்மை தமிழன் எடப்பாடியாரின் பொற்கால ஆச்சி எங்கே... வந்த பத்தே மாதத்தில்150 சதம் சொத்து வரி உயர்த்தி மக்களின் கோவணத்தை கூட உருவும் இந்த கேடுகெட்ட விடியாத திருட்டு திராவிட தெலுங்கர்கள் ஆச்சி எங்கே... மக்கள் உணரவேண்டும்...
இதுதான் இதுதான் மக்களோட தலையெழுத்து
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஒவ்வொறு முறையும் .......