Load Image
Advertisement

யாருடைய காலிலும் விழ மாட்டேன்: முதல்வர்

Tamil News
ADVERTISEMENT
சென்னை--''நான் சாதாரண ஸ்டாலின் அல்ல; கருணாநிதியின் மகன். அதனால் தான் பதவியேற்ற போதே, 'நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று கூறினேன். டில்லிக்கு சென்று யாருடைய காலிலும் விழவில்லை; தமிழகத்தின் உரிமைக்காகவே சென்றேன்; வேறு எந்தக் காரணமும் இல்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


முற்போக்கு கூட்டணிசென்னையில் நேற்று நடந்த, தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் இல்ல திருமண விழாவில், அவர் பேசியதாவது:இது, திருமண விழாவாக இருந்தாலும், இங்கு பேசிய பலர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கெல்லாம் முதல்வர் நல்ல தீர்வு காண வேண்டும் என்றனர். என்னிடம் சொன்னால் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு கோரிக்கைகளை முன்வைத்தனர். இவரிடத்தில் சொன்னால், அது நியாயமாக இருந்தால், நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை, இன்று தமிழகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால் தான், லோக்சபா தேர்தலாக இருந்தாலும், சட்டசபை தேர்தலாக இருந்தாலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தந்து, மக்கள் நம்மை தேர்ந்தெடுத்தனர்.

Latest Tamil Newsஆட்சிக்கு வந்த பின் நடந்த, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது என்பதற்கு, இவையெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.கருணாநிதி என்னென்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ; எதையெல்லாம் சாதித்துக் காட்டி இருக்கிறாரோ; அதையெல்லாம் அவர் வழி நின்று நானும் சாதிப்பேன்.


நான் சமீபத்தில், துபாய் சென்றிருந்த நேரத்தில், ஏதோ பல கோடி ரூபாயை எடுத்து கொண்டு சென்றதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசிய செய்தியை பார்த்தேன். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; எனக்கு முன் பேசியவர்கள் விளக்கம் தந்திருக்கின்றனர்.உரிமைக்குரல்அண்மையில் மூன்று நாள் பயணமாக டில்லிக்கு சென்று, நம் மாநிலத்தின் பிரச்னைகளை எல்லாம் பிரதமரிடமும், அதற்குரிய அமைச்சர்களிடமும் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் முன் கோரிக்கைகளை எடுத்து வைத்து, உரிமைக்குரல் கொடுத்து வந்திருக்கிறேன்.


அதையெல்லாம் மூடி மறைப்பதற்காக, அதை தாங்கிக் கொள்ள முடியாத சிலர், ஏதோ அச்சம், பயம் காரணமாக, ஏதோ சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ள என்னை, அதில் இருந்து காப்பாற்றி கொள்வதற்காக டில்லி சென்றதாக சொல்கின்றனர்.


ஒன்றை மட்டும் உறுதி யாக சொல்கிறேன். அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று, நான் கேட்க வில்லை. தமிழகத்தின் உரிமைக்காக நான் போனேனே தவிர, வேறு எந்த காரணமும் இல்லை. ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல; பதவியேற்ற போதே, 'நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று தான் சொல்லி இருக்கிறேன். நான் கருணாநிதியின் மகன். என்றைக்கும் தமிழகத்திற்காக உழைப்பேன். அவ்வாறு நான் உழைப்பதற்கு பொன்குமாரும் எனக்கு துணை நிற்பார்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மாநாட்டில் பங்கேற்க அழைப்புசென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை, கேரள மாநில ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கேரள மாநிலம் கண்ணுாரில், வரும் 9ல் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழை வழங்கி, அதில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார். அப்போது, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பா.ஜ., மூன்றாவது கட்சியா?டில்லி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தங்களை மூன்றாவது பெரிய கட்சி என, பா.ஜ., கூறுவது சரியான வேடிக்கை. ஏனெனில், ஒரு தேர்வில் ௯௦ சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவன், முதல் இடத்தை பிடித்தார். ௫௦ சதவீத மதிப்பெண் எடுத்தவர், இரண்டாவது இடம் பிடித்தார். வெறும், ௧௦ மதிப்பெண் மட்டுமே பெற்றவர், நான் தான் மூன்றாம் இடத்தை பிடித்தேன் என்று பெருமையாக கூறினார்.


அதுபோல, 10 சதவீத ஓட்டு மட்டுமே பெற்ற பா.ஜ., மூன்றாவது கட்சி என்று கூறுகிறது. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல்களில் நான்கில் பா.ஜ., வெற்றி பெற்றதை சாதனை என்று கூற முடியாது. உ.பி.,யில் முந்தைய தேர்தலை விட இப்போது, பா.ஜ.,வின் வெற்றி குறைந்துள்ளது. துணை முதல்வர் உட்பட, ௧௦ அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். உத்தரகண்டில் முதல்வரே தோல்வியடைந்தார். கோவாவிலும் அமைச்சர்கள் பலர் தோல்வியை தழுவினர்.


தமிழகத்தில், 10 ஆண்டு கால மோசமான ஆட்சியால் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. அதை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேர்தலின் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். தமிழகம் இழந்த பெருமையை மீட்கும் நோக்கில், அரசு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (84)

 • vijay - coimbatore,இந்தியா

  நம்பிட்டோம் ஊராட்சி முதல்வரே

 • V Ramasubramanian - Chennai,இந்தியா

  இவருடைய அப்பா கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் கேஸ் விஷயத்தில் இந்திரா காந்தி காலில் விழுந்து காப்பாற்ற கெஞ்சியதை சரித்திரம் மறக்காது. அதற்காக, தமிழ்நாட்டுக்கு பல துரோகங்கள் செய்ததையும் யாரும் மறக்க மாட்டார்கள்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  தலை, நீங்கள் யாருடைய மகன் என்று பெருமைப்பட்டு பேசுகிறீர்களோ, அந்த கருணாநிதி தன் மகனுக்கும், பேரனுக்கும் மந்திரி பதவி பெறுவதற்காக இலங்கையில் ஒட்டு மொத்த தமிழினமும் வேரடி மண்ணோடு அழித்தொழிக்க துணை போனதுடன் இல்லாமல் டெல்லியில் மின்னல் வேக பயணம் மேற்கொண்டது வரலாற்றுப் பக்கங்களில் உள்ளது. மறந்து போயிருந்தால் படித்துப் பார்க்கவும்.

 • ராஜா -

  காலில் எல்லாம் விழ வேண்டாம். பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போகவும். மக்களுக்கு நிர்வாகத்திறமை இல்லாத முதல்வர்,.

 • ramani - dharmaapuri,இந்தியா

  கருணாநிதி அன்றைய பிரதமர் இந்திரா ... சர்க்காரியா கமிஷனிலிருந்து காப்பாற்ற பட்டார். அது வெளிபடையாக தெரிந்தது. இது மறைமுகமாக தெரிகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement