Load Image
dinamalar telegram
Advertisement

தி.மு.க., பொய் புகார்; அண்ணாமலை கண்டனம்




சென்னை : 'தாறுமாறாக சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்தி விட்டு மத்திய அரசின் மீது பொய் புகார் தெரிவித்து தி.மு.க. அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Latest Tamil News


அவரது அறிக்கை:தமிழக அரசு திடீரென சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்றால் தொழில்கள் நலிவுற்றும் வருமானம் குறைந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் குடியிருப்பு சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது.



மக்களின் எதிர்ப்பை கண்டவுடன் அமைச்சர் நேரு இந்த தடாலடி சொத்து வரி உயர்வுக்கு நீண்ட விளக்கம் அளித்துஉள்ளார். அதில் உண்மைக்கு புறம்பாக 'மத்திய அரசு சொல்லிதான் நாங்கள் வரியை உயர்த்தினோம்' என்று பொய்யாக குறிப்பிடுகிறார்.

Latest Tamil News

எந்த இடத்திலும் மத்திய அரசின் ஆணையில் சொத்து வரியை உயர்த்தச் சொல்லவே இல்லை.தாறுமாறாக சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களை சந்திக்க துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது கோழைத்தனமான பொய் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (80)

  • Vikranth -

    பெட்ரோல், கேஸ் பத்தி பேசுங்க மொதல்ல. அப்புறம் சொத்து வரி பத்தி பேசலாம். சொத்தே இல்லாதவங்ககூட வாழ முடியாத அளவு வரி போட்டு மக்களை வயிறு எரிய பண்ணிட்டு அதைத்தவிர எல்லாம் பேசறீங்க.

  • ananda - thirunelveli,இந்தியா

    அமைச்சர் நேரு பொய் சொல்லுகிறார் என்றால் அவர் மீது திரு அண்ணாமலை அவர்கள் மத்திய அரசு சார்பாக அவதூறு கூறுவதாகா வழக்கு தொடரலாம் அல்லவா அல்ல என்றால் யார் சொல்லுவது பொய் என்று மக்கள் புரிந்துகொள்வார்கள் மத்திய அரசின் அடக்குமுறை அதிலும் எதிர்கட்சிகளில் ஆனாலும் மாநிலங்களை எந்த அளவுக்கு விரோத போக்கு கடை பிடிக்க வேண்டுமோ அதிலும் அதிகமாக செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர்களை கடுப்பேத்தி தவறாக மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி ஆட்சியை கலைக்க தருணம் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். திரு ஸ்டாலின் அவர்களின் நுண்ணறிவினால் சாதுர்யமாக நடந்துகொண்டு திறமையுடன் ஆட்சி நடத்திவருகிறார், அது இறைவன் கொடுத்த ஞானமே அல்லாமல் வேறல்ல மம்தா பனர்ஜீ அவர்ளைம் இதே போன்று கடுப்பேத்தி கவிழ்க்க தீவிர முயற்சி எடுக்கிறார்கள் என்பது உலகே அறியும்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    சொத்து வரியை உயர்த்த சொல்லி மத்திய அமைச்சகம் பெப்ரவரி 31 ஆம் தேதி சொன்னார்களாம் விடியலரசு மந்திரி k n நேரு சொல்லறார் பொய்ச்சொல்லுவதில் சமர்த்தர்கள் மக்கள் முட்டாள்கள்

  • DVRR - Kolkata,இந்தியா

    திருட்டு திராவிட மடியல் அரசின் உத்தம வார்த்தைகள் இவை????ஏனெனில் இவர்கள் உலகிலேயே மகா உத்தமர்கள்????கலிகாலம் உச்சம் என்பது இது தான்

  • Soumya - Trichy,இந்தியா

    புரூடா விடியலின் வாயில் பொய்யை தவிர உண்மை ஒன்றும் வராது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement