ஆத்தூர்: சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி மக்களின் சொத்தை முதல்வர் ஸ்டாலின் அழிக்க பார்ப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் தலைவாசலில், அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

இதில், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வருவதும், திறந்து வைத்தும் வருகிறார். உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் முதல் பரிசாக, சொத்து வரி உயர்த்தியுள்ளார். இரண்டாண்டு ஆண்டு வேலையில்லாமல் இருக்கும் மக்களிடம் சொத்துவரி ,வீட்டு வரி உயர்த்தப்பட்டது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த உடனே மக்களிடம் ஒரு 25 சதவீதம் உயர்த்தி இருக்கலாம். ஆனால் 150 சதவீதம் உயர்த்தி மக்களின் சொத்தை அழிக்கப் பார்க்கிறார் இன்றைய முதல்வர் ஸ்டாலின்.
இந்த ஆட்சியில் போதைப்பொருள் விற்பனையை அதிகமாகிவிட்டது. இதில் மாணவர்கள் இளைஞர்கள் அதிக அளவு பாதிக்கப்படுவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. வருங்காலத்தை பாதிக்கும் வகையில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. சரியான முறையில் அதனை நிர்வகிக்கவும் இல்லை இந்த அரசு.
இந்த ஆட்சிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் எங்கு பார்த்தாலும் அதிகரித்துவிட்டது. இது திறமை இல்லாத அரசு என்பதை காட்டுகிறது. மக்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பரிசு எங்கள் ஆட்சியில் வழங்கி வந்தோம். அதுவும் பணமாக தொகை 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு என கொடுத்து மக்கள் சந்தோஷமாக இருந்தனர். இந்த ஆட்சியில் கொடுத்த பொருள் எப்படிப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.
இந்த பகுதியில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் ஆயிரம் கோடி மதிப்பில் கால்நடை பூங்கா உருவாக்கிய எங்க பார்த்தாலும் கட்டிடமாக நிற்கிறது. தடுப்பணைகள் நிறைய இங்கு கட்டப்பட்டது. சாலை வசதிகள் குடிநீர் வசதிகள் போன்றவை எங்கள் ஆட்சியில் செய்து கொடுக்கப்பட்டது. இப்போது அவர் என்ன உங்களுக்கு செய்து கொடுத்தார்.
டில்லிக்கு நான் சென்றபோது காவடி தூக்கியதாக கூறிவிட்டு இவரே இன்று டில்லிக்கு எதுக்குச் சென்றார் .
கோ பேக் - மோடி -எனக்கூறிவிட்டு இவர் இன்று பிரதமரை சந்திக்க சென்றுள்ளார். உக்ரைன் நாட்டு மாணவர்களை நல்ல முறையில் பிரதமர் மீட்டு கொடுத்தார். தற்போதைய முதல்வர் நாகரீகம் தெரியாதவர். தமிழகத்தில் ஆளும் கட்சியானது மத்திய அரசுடன் நல்ல உறவு வைத்திருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்தேன். திமுக ஆட்சிக்கு வந்தாலே நில அபகரிப்பு கூடவே வந்துவிடும் எனக் கூறினார். இன்றைய முதல்வர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றார்.திமுக ஆட்சியில் போதைப்பொருள் கூட்டு பலாத்காரம் கற்பழிப்பு என அதிகரித்து வருகிறது.

அதிமுக-வுக்கும் சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சசிகலா ஆன்மிக சுற்றுலா செல்கிறார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. அவருக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என பலமுறை கூறி உள்ளோம். ஆனால், இவற்றை ஊடகங்கள் பெரிதுபடுத்தி வைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
" இன்னும் பம்பர் பரிசு காத்திருக்கு "
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் 25 சதவிகிதம் முதல் அதிகபட்சம் 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
"சட்டசபை தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (24)
சென்னையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வரி உயர்த்தப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 200 சதவீத வரி உயர்த்தப்பட்டது. தேர்தல் வந்ததால் தாங்கள் வெளியிட்ட வரி உயர்வை அதிமுக நிறுத்தி வைத்தனர்.
மக்களிடம் எங்கே சொத்து இருக்கிறது, அழிப்பதற்கு??
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி விட்டு இப்போது அது முடியாததால் கவர்னர் கூட மத்திய அரசு பேச்சை கேட்க வில்லை நாங்கள் என்ன செய்ய முடியும். கவர்னர் எங்கள் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாததால் எங்கள் மீது தவறு கிடையாது என்று சொல்லி விட்டு இப்போது நாங்கள் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்கிறோம் என்று கூறுவார்கள். நீட் தேர்வு தயார் செய்வதிலும் மாணவர்களிடம் இருந்து கட்டணம் என்ற பெயரில் பணம் பிடுங்குவார்கள். ஸ்டாலின் தனக்கு எது சாதகமாக இருப்பதை மட்டும் வைத்து கொண்டு மற்றவைகளை மத்திய அரசு மேல் பழி போட்டு விடுவார். இதை பல வருடங்களாக செய்து வருகிறார்கள்.
EPS அவராகவே சொத்து வரி சொல்லாது வைதாதிருப்பவர் மேல் விதிகாகபடுது அது வருடதாதிற்கு ஒரு முறை கட்ட வேண்டியது. பெடாரொல் டீசல் விலையை தினந்தோரும் ஏற்றி எங்கள் சொத்துகளை தினசரி கொள்ளையடிக்கும் உங்கள் கூட்டனி கட்சியின் குறையை சுட்டிகாட்ட பயமா?
இப்போது திமுக மத்திய அரசின் நிபந்தனை காரணமாக சொத்து வரியை உயர்த்தி உள்ளதாக தைரியமாக கூறியுள்ளது.