டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று (மார்ச் 31) பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, திமுக தலைமை அலுவலகம் திறப்பு தொடர்பாக அழைப்பு விடுத்தது மட்டுமல்லாமல், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

இந்நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி நிர்மலா சீதாரமனிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
கோரிக்கை
இந்த சந்திப்பின் போது, நிர்மலா சீதாராமனிடம், தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.13,504.74 கோடி உட்பட 20,8860.40 கோடி நிலுவையில் உள்ளது. மாநிலம் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ரூ.20,860.40 கோடியை விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு காலக்கெடுவை 2022ஜூன் மாதத்திற்கு பிறகும் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்.
14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைத்த அடிப்படை மானியம் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தை விடுவிக்க வேண்டும். அடிப்படை மானிய நிலுவை தொகை ரூ.548.76 கோடி. செயல்பாட்டு மானியம் ரூ.2029.22 கோடி விரைந்து விடுவிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்
வாசகர் கருத்து (28)
இந்தியாவில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஐந்தரை சதவீதம். ஜிஎஸ்டி வசூலிலும் அதே சுமார் ஐந்தரை சதவீதம்தான் இங்கு வசூலாகியுள்ளது. ஆக இது 🤠 பின்னேறிய மாநிலம்
முதலில், தமிழகத்துக்கு மொத்தம் எவ்வளவு நிலுவை தொகை (எல்லாவற்றையும் சேர்த்து) மத்திய அரசிடமிருந்து வரவேண்டும் என்பதை மாநில அரசு தெளிவாக சொல்லவேண்டும் .......... 6000 கொடியில் ஆரம்பித்து 28000 கோடி வரை சென்று, 15000 க்கு வந்து இப்போது 20000 த்தை எட்டியிருக்கிறது ........... எது சரியென்பது தெளிவாக இல்லை.
1). நமது முதல்வரிடம் நமக்கு பிடித்தது அந்த பணிவான அணுகுமுறை. நமக்கு காரியம் ஆக வேண்டும் எனில் பணிவு அவசியம். 2). மேடம் நிர்மலா சீதாராமன் உண்மையில் தற்கால இந்தியாவின் சிறந்த ஃபைனான்ஸ் மினிஸ்டர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.3). பொருளாதார வித்வான் என்றே நாம் திரு நிர்மலா சீதாராமன் அவர்களை அழைக்கலாம்.4). அவரது செயல்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக கொரனோ காலகட்டத்தில் மெருகேறி உள்ளது என்பதிலும் ஐயமில்லை.5). அவரால்தான் இந்தியர்களாகிய நாம் இன்று நிம்மதியாக பெரும் மூச்சு விட முடிகிறது. பல அண்டை நாடுகள் குறிப்பாக பாகிஸ்தானின் இலங்கை மேலும் பல உலகளாவிய நாடுகள் பொருளாதரத்தில் கொரனோ பாதிப்பில் இருந்து மீள முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள். நன்றி வணக்கம் ஐயா
தளபதி….தளபதி தான் …..டெலெப்ரோம்ப்டர் பிரதமர் இல்லய்….
அண்டபுளுகு @annamalai_கே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலைவை தொகை 20860 கோடி அதில் GST 6733 கோடினு எங்கள் தலைவர் ஒன்றிய நிதி அமைச்சரிடம் மனு கொடுத்து இருக்காங்க இதற்கும் ஒரு புது பொய் வைச்சு இருப்பீங்களே வாங்க பிரஸ்மீட் நடத்துங்க உங்களின் இன்றைய பொய்க்காக waiting