Load Image
dinamalar telegram
Advertisement

இலங்கை கலவரம்: 45 பேர் கைது ; அதிபரின் வீடு முற்றுகையில் வன்முறை

Tamil News
ADVERTISEMENT
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர்; போலீஸ் பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். வன்செயல்களை சில தேசவிரோத சக்திகள் தூண்டியதாக இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.

Latest Tamil News


இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் 'காஸ்' உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால், நீர் மின் நிலையங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மின்சார வினியோகம் தடைபட்டு, மின் வெட்டு நேரத்தை தினமும் 13 மணி நேரமாக, இலங்கை அரசு உயர்த்தியது.

Latest Tamil News

இந்நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக கொழும்புவில் மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தை சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருடன் அவர்கள் மோதல் போக்கை கடைபிடித்ததையடுத்து, துணை ராணுவ படை குவிக்கப்பட்டது. அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றியும், போலீஸ் மீது கல் வீச்சிலும் ஈடுபட, போராட்டம் வன்முறையாக மாறியது. அங்கிருந்த போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் கலைத்தனர். இதனைதொடர்ந்து கொழும்பு நகரின் வடக்கு, தெற்கு, மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (33)

 • Sri Ra - Chennnai,இந்தியா

  சப்பை மூக்கு வெச்சி செஞ்சிட்டான் அடுத்து நேபால் இதே தான்

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  தேசதுரோகிகள் பட்டம், தங்கள் தேவைகளை தேடும் பாமர மக்களுக்கு ஆள்கின்ற சுயநலவாதிகளால் வழங்கப்படுகிறது. தேவைகள் நிறைவேற்றப்பட்டால் ஏனிந்த நிலை?

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  லங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாகப் போக விரும்புபவர்களுக்கு இந்தியா கப்பல் வசதி செய்து தரலாம். மற்றபடி ராஜபக்ஷ அரசுக்கு இந்தியர்களின் வரிப்பணத்தைக் கடனாகத் தர மோதி அரசுக்கு தார்மீக உரிமை இல்லை.

 • Asagh busagh - Munich,ஜெர்மனி

  சீனாவோட சேர்ந்துக்கிட்டு இந்தியாவோட கேம் ஆடுனானுங்க. இப்ப ராஜபக்சே பிச்சையே எடுத்தாலும் காரணகார வியாபாரி சீனா சல்லி காசு கொடுக்க மாட்டேனு சொல்லீட்டானுங்க. ஆரம்ப காலத்துல இருந்தே மனித உரிமை மீறல் பிரச்சனையில மேலை நாடுகளையும் பகைச்சுகிட்டானுங்க. இனிமே அதே மேலை நாடுகளிட்ட (IMF, World Bank) போயி கையேந்தனும். ஆனா அவுங்க ராஜபக்சேவை போர் குற்றவாளியா அறிவிக்கணும், செலவீனத்தை குறைக்கணும்னு கண்டிஷன் போடுவாங்க. பேசாம கச்சதீவ நல்ல ரேட்டுக்கு இந்தியாவுக்கு வித்து காசாக்கலாம். எப்படி பார்த்தாலும் இனிமே இடி மேல இடி தான். நல்லா வேணும்டா உங்களுக்கு. கர்மா சுத்தி சுத்தி அடிக்கப்போவுது. பாவம் ஏழை மக்கள் தான்.

 • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

  இந்த ராஜ் பக்ஷே சீனாவிடம் நாட்டை அடகு வைத்து விட்டான்////ஆமை புகுந்த வீடாய் போனது இலங்கை//////இனி அங்கு அமைதி திரும்பாது////அழிவு தான் தொடரும்//////99 ஆண்டு லீசுக்கு தன நாட்டின் ஒரு பகுதியை கண் காணிப்புக்கு அப்பாற் பட்ட சீனாவின் பகுதியாய் மாற்றுவதற்கு அனுமதி கொடுத்து இந்தியாவின் முதுகில் குத்தியவன்////அகதிகள் போர்வையில் ஜவ்ஹீத் பயங்கரவாதி நிச்சயம் தமிழ் நாட்டில் வந்து குவிய போகிறான் என்கிறார்கள்/////மத்திய உள்துறை விழிக்க வேண்டும்///தமிழகம் மூலம் இவனுகளால் நாட்டுக்கே பெரிய ஆபத்து காத்திருக்கிறதாம்//// இத்தருணத்தை பயன் படுத்தி கச்சத் தீவை இந்தியா இலங்கையிலிருந்து கேட்டுப் பெறுவதற்கு பொன்னான வாய்ப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement