Load Image
dinamalar telegram
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு; அமைச்சரவை ஒப்புதல்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோவிட் நெருக்கடி காலகட்டத்தில் மத்திய அரசுக்கு செலவுகள் அதிகரித்ததால், மத்திய அரசு உழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்தாண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம் டில்லியில் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil Newsஅதன்படி, மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.9,544.50 கோடி செலவினம் ஏற்படும் எனவும், 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

  • venkatan - Puducherry,இந்தியா

    நலவாழ்வுத்துறையின் செவிலியர்,ஆய்வாளர்கள், உதவியாளர் என்போர் முன்கள ஊழியர்களுக்கு அரசின் சம்பளத்தைத் தவிர வேறு வருமானம் கிடையாது.இவர்கள் உட்பட பலரும் கோரோனோ தொற்றில் அபாயத்திலும் அர்ப்பணித்து வேலை செய்தவர்கள்.. அதேபோல தடுப்பு ஊசி ப் பணியிலும்... இவர்களுக்கு பதவி உயர்வு அரிது..இன்னும் ஒப்பந்த அடிப்படையில் வேலை.. இவர்களை மக்களும் அரசும் ஆத ரிக்க வேண்டும்.

  • Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா

    எந்த மாதத்திலிருந்து அகவிலைப்படி உயர்த்தப்பட்டது என்பதை தெளிவாக சொல்லவில்லையே

  • vnatarajan - chennai,இந்தியா

    மத்திய அரசில் வேலை செய்ப்பவர்கள் நாற்பத்தெட்டு லச்சம் என்றால் பென்ஷனேர்ஸ் ஆறுபத்தொன்பதுபேர் உள்ளனர். இ தன் விகிதாச்சாரம் கிட்டத்தட்ட ஒன்றுக்கு ஒன்றரை பேர் உள்ளனர். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சீனியர் சிட்டிசன் கல் எல்லாம் தற்போது ஹெல் அண்ட் ஹெல்த்தியுடன் நீண்ட நால் வாழ்கிறார்கள் என்று. தெரிகிறது.வாழ்க சீனியர் சிட்டிசன்

  • Rengaraj - Madurai,இந்தியா

    ஒரு மத்திய அரசு ஊழியர் ஒருவர் இருபது வயது முதல் பி.எப் தொகையாக மாதம் ருபாய் ரெண்டாயிரம் செலுத்துகிறார் என்றால் அரசும் ரெண்டாயிரம் அவர் கணக்கில் செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்துகிறது என்று வைத்துக்கொண்டால் அவரது ஓய்வு காலமான அறுபது வயதுதில் அரசின் பங்காக தரப்பட வேண்டிய தொகை கூட்டு வட்டியோடு ( குறைந்த பட்சம் மாதத்துக்கு 59 பைசா வட்டி வருடத்துக்கு ஏழு சதவீதம் என்று வைத்துக்கொள்வோம்) ருபாய் ஐம்பது லட்சம் என்றாகியிருக்கும். மாறாக அரசாங்கம் அவ்வப்போது செலுத்தாமல் ஓய்வு காலத்தில் பென்ஷன் என்று மாதா மாதம் அவருக்கு தருகிறது. அவர் இறந்துவிட்டால் அவர் வாரிசு அதில் ஐம்பது சதவீதம் பெறுகிறார். எனவே ஓய்வூதியர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று யாரும் கருதவேண்டாம். தனக்கு சேர வேண்டியதை மட்டுமே தவணையில் பெறுகிறார். கூட்டு வட்டியில் சந்தேகம் இருப்பவர்கள் பக்கத்தில் இருக்கும் ஏதாவது வங்கி மேலாளரை அல்லது வங்கி ஊழியரை அணுகி சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம்.

  • முருகன் -

    சாதாரண மக்களுக்கு வரவை விட செலவு அதிகரிக்கிறது .இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

Advertisement