Load Image
Advertisement

அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம்

 அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம்
ADVERTISEMENT

சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


தன்னை ஜாதி பெயரை சொல்லி மிரட்டியதாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.,) ராஜேந்திரன் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

Latest Tamil News
ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னணி



ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பி.டி.ஓ., ராஜேந்திரன் கூறியதாவது: மார்ச் 27 காலை என்னையும் மற்றொரு பி.டி.ஓ., அன்பு கண்ணனையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டிற்கு வரச் சொன்னதாக உதவியாளர் சத்தியேந்திரன் கூறினார்.அமைச்சரை சந்திக்க சிவகங்கை வீட்டிற்கு சென்றபோது அவர் என்னை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, ஒன்றிய தலைவர் சொல்றதை மட்டும் தான் கேட்பாயா, எங்க கட்சிக்காரர் சொல்வதை கேட்க மாட்டாயா.உன்னை பி.டி.ஓ., சீட்டில் வைக்க மாட்டேன். உடனடியாக உயர் அதிகாரி அமுதாவிடம் சொல்லி பணிமாறுதல் செய்வேன். பி.டி.ஓ., பதவி வகிப்பதற்கு உனக்கு தகுதி இல்லை என கோபமாக பேசினார்.வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் என்னால் துாங்க முடியவில்லை. இதுதொடர்பாக கலெக்டர், கூடுதல் கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க சென்றேன். சந்திக்க முடியவில்லை. திரும்ப வந்து ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்கிறேன். இது நான் சந்திக்காத மனக்காயங்களை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.
இதையடுத்து தான் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் போக்குவரத்து துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பிற்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.



வாசகர் கருத்து (28)

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    சாதாரணமாக ஒருவர் இன்னொருவரின் சாதியைப் பற்றிப் இழிவாக பேசியிருந்தால் அவரை சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு போடுவார்களா, மாட்டார்களா?

  • Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா

    போக்குவரத்து அதிகாரி லஞ்சம் வாங்கினால் பணியிட மாற்றம். கழிவறையை சுத்தம் செய்யச் சொன்ன தலைமையாசிரியை பணியிட மாற்றம். சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய போக்குவரத்து அமைச்சர் பணியிட மாற்றம். சாதிப் பெயர் சொல்லித் திட்டியவர் எப்படி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு செட் ஆவார். என்னமோ போடா மாதவா.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சமூக நீதி காவலர்கள் காணாமல் போய்ட்டாங்க

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    ஜாதி பெயரை சொல்லி திட்டியமந்திரி ஜாதி துறைக்கே மந்திரி.. சூப்பர்.. போக்குவரத்து துறையில் லஞ்சப்பணம் மாட்டியதற்கும் இதற்கும் முடிச்சு போட கூடாது. காக்கா உட்கார்ந்து சிலை எச்சம் பட்ட கதை.. ஜாதி பெயரை சொல்லி கேவலபடுத்தியதற்க்கு என்ன தண்டனை. ஒருவேளை மந்திரி என்பதால் தண்டனை கிடையாதோ??

  • sankar - சென்னை,இந்தியா

    இவர் முதன்முதலில் ஜெ. மந்திரிசபையில் மந்திரியான போது ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement