Load Image
dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டி: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சியுடன் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் பா.ஜ., நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது.என்.ஆர்.காங்., கட்சியின் தலைவர் ரங்கசாமி, கடந்தாண்டு மே 7ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே நடந்த பதவி பங்கீட்டில் நீண்ட இழுபறிக்கு பிறகு, பா.ஜ.,விற்கு சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர் பதவியும், என்.ஆர்.காங்., கட்சிக்கு துணை சபாநாயகர் மற்றும் மூன்று அமைச்சர் பதவி என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இலாகா ஒதுக்கீடு செய்யவில்லை.ஜூன் 27ல் அமைச்சர்கள் இலாகா இன்றி பதவியேற்றனர். நீண்ட இழுபறிக்கு பின் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்வரின் செயல்பாடு, பா.ஜ.,வினரை அதிருப்தி அடையச் செய்தது.

Latest Tamil News

இந்நிலையில், பா.ஜ., கட்சியை பலப்படுத்திட சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், முதல்வர் ரங்கசாமி மறுத்துவிட்டார். இதனால் பா.ஜ., மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் முதல்வர் மீது கடும் அதிருப்தி கொண்டனர்.இதுதொடர்பாக கட்சி மேலிடத்தில் முறையிட்டு வந்தனர். கடந்த 26ம் தேதி பா.ஜ., அகில இந்திய அமைப்பாளர் சந்தோஷ், மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில், கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு, நமது கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றனர்.அதனைத் தொடர்ந்து பேசிய மேலிட நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுமாறும், கொம்யூன் மற்றும் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்திடவும் அறிவுறுத்தினர். இந்நிலையில் நேற்று, உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது.
Latest Tamil News
இதுகுறித்து பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் கூறியதாவது: புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வரும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் தொடரும். உள்ளாட்சி தேர்தல், கூட்டணியை கட்டுப்படுத்தாது. தமிழகத்தில் அ.தி.மு.க.,வோடு கூட்டணியில் இருந்தாலும், அங்கு கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட்டது.

அதேபோன்று, புதுச்சேரியில் கட்சியின் பலத்தை நிரூபித்திட, நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் கூட்டணியை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற பா.ஜ.,வின் முடிவால், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (24)

  • Venugopal S -

    இந்த பழனிச்சாமி, ரங்கசாமி இவர்களுக்கு எல்லாம் பட்டாலும் புத்தி வராது.அந்த வட இந்திய ஃபிராடு கட்சியுடன் கூட்டணி வைத்தால் அழிந்து தான் போவார்கள்

  • krish - chennai,இந்தியா

    எத்தனை காலம் தான் அடுத்தவன் முரண்டு, முரட்டு குதிரையை நம்பி சவாரி செய்வது?

  • பைரவர் சம்பத் குமார் -

    1).தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்த ஓட்டுகள் 2.8 கோடி. 2).தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை1.7 கோடி 3).தமிழகம் முழுக்க மொத்த இடங்களில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்ட இடங்களில் சதவீதம் 42 அதாவது 42 சதவீத இடங்களில் மட்டுமே போட்டி இட்டது. 4).பாஜக போட்டியிட்ட இடங்களில் பதிவான ஓட்டுகள் 75 லட்சம். 5).போட்டியிட்ட இடங்களில் பாஜக பெற்ற ஓட்டுகள் 9 லட்சம். 6).போட்டியிட்ட இடங்களில் பதிவான ஓட்டுகளில் பாஜக பெற்ற குறிப்பு கூட்டணி இல்லாமல் தனித்து நின்று பெற்ற ஓட்டின் சதவீதம் 8.3 சதவீதம். 7). உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலும் எந்த கட்சி ஆட்சியால் உள்ளதோ அந்த கட்சிக்கே மக்கள் வாக்காளிப்பார்கள். ஏன் எனில் அப்பொழுது தான் நிதி ஒதுக்கீடு மற்றும் வார்டு தோறும் உள்ள திட்டங்கள் நிறைவேறும். 8). மேலும் கொலுசு, ஹாட் பாக்ஸ், பணம், ஆட்சி பலம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே திமுகவின் வெற்றி. 9). மேலும் 13 கட்சிகளின் கூட்டணியாக தேர்தலை சந்தித்த கட்சி தி.மு.க.மற்றும் தனியாளாக நின்ற கட்சி BJP. 10). மேலும் ஒட்டு பதிவு 70 to 75 சதவீதம் நடந்து இருந்தால் திமுக தலையில் துண்டைப் போட்டு இருக்கும். 11). இப்படி எப்படி பார்த்தாலும் கை சூப்பும் குழந்தை கூட BJP ரேசில் முன்னணியில் உள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 12). முதலில் தி.மு.கவை தனியாக தேர்தலில் கூட்டணி இல்லாமல் நிக்க சொல்லுங்கள். குறிப்பாக 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில்.நன்றி வணக்கம் ஐயா.

  • sankaseshan - mumbai,இந்தியா

    ராமா உலகில் எதுவும் நிரந்தரமில்லை மாற்றம் மட்டும் மாறாதது நீ இருக்கும்போதே திருடர்கள் மண்ணை கவ்வுவதை பார்ப்பாய்

  • balakrishnan - Mangaf,குவைத்

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

Advertisement