Load Image
dinamalar telegram
Advertisement

ஏற்றுமதியில் இந்தியா சாதனை: பிரதமர் பாராட்டு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: இதுவரை இல்லாத அளவாக, 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: 400 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை முதன்முறையாக எட்டியுள்ளது. இந்த சாதனைக்காக விவசாயிகள், நெசவாளர்கள், சிறு, குறு தொழில் செய்வோர், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். நமது தன்னிறைவு இந்தியா பயணத்தில் இது முக்கிய சாதனையாகும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
Latest Tamil News

ஏற்றுமதியில் சாதனை படைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களை விட 9 நாட்களுக்கு முன்னதாகவே இந்தியா, இலக்கை எட்டியது தொடர்பான விவரங்களையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News

சராசரியாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 46 மில்லியன் டாலர் அளவுக்கும், ஒரு நாளைக்கு 1 பில்லியன் டாலர் அளவுக்கும், ஒவ்வொரு மாதத்திற்கு 33 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.


2020-21 நிதியாண்டில், 292 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடந்த நிலையில், 21022 நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்., மாதம் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ஏப்.,2021 முதல் 2022 ஜன., வரை , இந்தியாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே 334 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி நடந்த நிலையில், 12 மாதத்திற்கு முன்பாகவே சாதனை படைத்துவிட்டோம். மார்ச் 31க்குள் 400 பில்லியன் டாலர் என்ற இலக்கை தாண்டிவிடுவோம் என தெரிவித்திருந்தார்.


வாசகர் கருத்து (15)

  • John Miller - Hamilton,பெர்முடா

    இறக்குமதி சாதனை விண்ணை தொட்டு நிற்கின்றது. அதை வசதியாக சொல்ல மறந்து விட்டார். விவசாய பொருட்களுக்கு உலகம் முழுவதும் ஏற்பட்ட டிமாண்ட் காரணமாகத்தான் இந்த சாதனை. இதில் ஒன்றிய அரசு பெருமை படும்படி ஒன்றும் இல்லை.

  • Venugopal S -

    இந்தியாவிற்கு என்று தனியாக எந்த ஏற்றுமதி சாதனையும் கிடையாது.எல்லா மாநிலங்களின் மொத்த பங்களிப்பே நாட்டின் சாதனை.மாநிலங்களின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம், அதிலும் குறிப்பாக முன்னேறிய மாநிலங்களான மஹாராஷ்டிரா தமிழ்நாடு கர்நாடகா குஜராத் போன்ற மாநிலங்கள் சிறப்பாக செயல்படாமல் இந்தியா என்ற நாடு முன்னேற்றம் காண முடியாது.தமிழகம் நாட்டின் முதல் மூன்று அதிக ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.இது புரியாமல் இங்கு சிலர் தமிழகத்தைக் கேவலமாக பேசுவது அநாகரிகம் மட்டுமல்ல முட்டாள்தனமும் கூட.

  • SUBBU - MADURAI,இந்தியா

    இது பாஜகவின் பிரதமர் மோடி அரசினால் மட்டுமே சாத்தியம்.ஒரு பில்லியன் டாலர் என்பது நம் நூறு கோடி இந்திய ரூபாய்க்கு சமம்.அப்படியென்றால் நானூறு பில்லியன் டாலர்கள் என்றால் 400×100=?தலை சுற்றுகிறது..ஜெய்ஹிந்த்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நேரு போட்ட அடித்தளம் என்று உருட்ட பலர் வருவார்களே?

  • Soumya - Trichy,இந்தியா

    நம்பில் விடியல் நாட்டின் ஏற்றுமதியில் முதலடம்னு நாளைக்கு அறிக்கை உடுவாரூ பாருங்க ....ஹீஹீஹீ

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement